9 நாடுகளில் 1.71 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கியது இந்தியா.. அடி தூள்..!

http://tamil.goodreturns.in/news/2017/05/31/1-7-lakh-local-jobs-created-apac-nations-strong-presence-indian-companies-007981.html?utm_source=/rss/tamil-money-news-fb.xml&utm_medium=65.123.11.181&utm_campaign=client-rss

உலகின் முன்னணி நாடுகள் அனைத்தும் விசா கட்டுப்பாடுகள் விதித்து வரும் இந்த வேளையிலும் இந்திய நிறுவனங்கள் வெளிநாடுகளில் சுமார் 1.71 லட்ச வேலைவாய்ப்புகளை உருவாக்கி 9 நாடுகளின் வளர்ச்சிக்கு முக்கியப் பங்காற்றியுள்ளது.

மேலும் இதில் மிகவும் குறைவான எண்ணிக்கையே விசா தேவைப்படுபவை, மீதமுள்ளவை அனைத்தும் உள்நாட்டு மக்களுக்கு அளிக்கப்பட்டவை என இந்திய தெரிவித்துள்ளது.

9 நாடுகள்

விசா பிரச்சனை குறித்துப் பிராந்திய விரிவான பொருளாதாரக் கூட்டு (RCEP) ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள சீனா, ஜப்பான், தென் கொரியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் ஏசியன் நேஷன்ஸ் அடங்கிய 9 நாடுகளிடும் இந்திய பேச்சுவார்த்தை நடத்தியபோது இந்தத் தகவல்களைத் தெரிவித்தது.

நெகிழ்வு

இதுகுறித்து விசாரணை செய்யும்போது இந்தியா, 9 நாடுகளில் செய்யப்படும் இறக்குமதிக்கு வரி சலுகையும், இங்கு வரும் ஐடி மற்றும் ஆர்கிடெக்ட் ஊழியர்களுக்கு அளிக்கும் வேலைக்கான விசா வழங்குவதில் கட்டுப்பாடுகள் தளர்வும், நெகிழ்வையும் அளிக்குமாறு இந்திய கேட்டுக்கொண்டது.

இந்திய ஊழியர்கள்

மேலும் இந்திய ஊழியர்கள் மட்டும் அல்லாமல் இந்திய நிறுவனங்களான இன்போசிஸ், விப்ரோ, டிசிஎஸ், மற்றும் எச்சில் எனப் பல நிறுவனங்களும் உங்கள் பொருளாதார வளர்ச்சிக்குப் பங்களிக்கிறது எனவும் இந்திய அரசு சார்ப்பில் இந்தக் கூட்டத்தில் பதிவு செய்தது.

சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியா

இந்தக் கூட்டம் ஆசியா பசிபிக் கண்டத்தில் இருக்கும் நாடுகளுக்கு மத்தியிலாது. இந்நிலையில் சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியா நாடுகள் விதித்துள்ள விசா கட்டுப்பாடுகள் குறித்து இந்திய அரசு தனிப்பட்ட முறையில் ஆலோசனை செய்துள்ளது.

(Visited 2 times, 1 visits today)
இந்த பதிவை முழுமையாக படிக்க

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *