'டெங்கு' கொசுவை ஒழிக்க துப்புரவு பணி கலெக்டர்களுக்கு முதல்வர் உத்தரவு

http://www.dinamalar.com/news_detail.asp?id=1874290

சென்னை:’அனைத்து மாவட்டங்களிலும், 15 நாட்களுக்கு, ‘டெங்கு’ கொசு உற்பத்தியாக வாய்ப்புள்ள பகுதிகளில், கலெக்டர்கள் தலைமையில், துப்புரவு பணி மேற்கொள்ள வேண்டும்’ என, முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

 'டெங்கு' கொசுவை ஒழிக்க துப்புரவு பணி கலெக்டர்களுக்கு முதல்வர் உத்தரவு

டெங்கு மற்றும் பருவ காலங்களில் ஏற்படும் காய்ச்சல்களை கட்டுப்படுத்துதல் குறித்த ஆய்வுக் கூட்டம், சென்னை, தலைமை செயலகத்தில், நேற்று முன்தினம் நடந்தது. முதல்வர், பழனிசாமி, துணை முதல்வர், பன்னீர்செல்வம், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

கூட்டத்தில், டெங்கு ஏற்படுத்தும், ‘ஏடிஸ்’ கொசுக்களை ஒழிக்க, தற்போது எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்தும், மக்களிடையே மேற்கொள்ளப்பட்டு வரும் விழிப்புணர்வு

பிரசாரம், மருத்துவமனைகளில் உள்ள வசதிகள் குறித்தும், முதல்வர் ஆய்வு செய்தார்.

அதன்பின், அதிகாரிகளுக்கு, முதல்வர் பிறப்பித்த உத்தரவுகள்:

* அனைத்து மாவட்டங்களிலும், கலெக்டர்கள் தலைமையிலும், சென்னையில், மாநகராட்சி கமிஷனர் தலைமையிலும், வரும், 15 நாட்களுக்கு, டெங்குகொசு உற்பத்தியாக வாய்ப்புள்ள, நீர் தேங்கும் இடங்கள், குப்பை, கட்டுமானப் பகுதிகள் போன்றவற்றில், முழுமையாக துப்புரவு செய்யும் பணி மேற்கொள்ள வேண்டும்
* இப்பணிகளை, வட்டம் மற்றும் வட்டார அளவில் கண்காணிப்பதற்காக, சிறப்பு குழுக்கள் அமைக்கப் பட வேண்டும். இக்குழு உறுப்பினர்கள், தினமும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பகுதிகளில், துப்புரவு பணி நடைபெறுவதை கண்காணித்து, கலெக்டருக்கு அறிக்கை அனுப்ப வேண்டும்
* இப்பணிகளை கண்காணிப்பதற்காக, கலெக்டர் தலைமையில், மாவட்ட அளவிலான குழு அமைக்கப்பட வேண்டும். அனைத்து இடங்களிலும், கூடுதல் துப்புரவு பணியாளர்கள் மற்றும் தேசிய ஊரகவேலைவாய்ப்பு திட்ட பணியாளர்கள், துப்புரவுப் பணியில் ஈடுபடுத்தப்படுவர்
* பள்ளிகள், கல்லுாரிகள், அரசு மற்றும் தனியார் அலுவலக வளாகங்கள், கட்டுமானப் பணிகள் நடக்கும் இடங்கள், குடிசைப் பகுதிகளில், இப்பணிகளை துரிதப்படுத்த வேண்டும்

(Visited 1 times, 1 visits today)
இந்த பதிவை முழுமையாக படிக்க

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *