'சோலார்' ஊழல்: கலகலத்தது காங்.,

http://www.dinamalar.com/news_detail.asp?id=1874305

Advertisement பதிவு செய்த நாள் 13 அக்
2017
00:44

திருவனந்தபுரம்: காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான, உம்மன் சாண்டி மற்றும் முன்னாள் அமைச்சர்கள் மீது, பாலியல் பலாத்காரம் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்ய, பினராயி விஜயன் தலைமையிலான கேரள அரசு முடிவு செய்துள்ளதால், கேரள மாநில காங்கிரஸ் கலகலத்துள்ளது.
கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது.
‘முன்னாள் முதல்வரும், காங்., மூத்த தலைவருமான, உம்மன் சாண்டி முதல்வராக இருந்தபோது,’சோலார்’ எனப்படும், சூரிய ஒளியில் மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தில் ஊழல் நடந்ததாக, சரிதா நாயர் கூறிய சரமாரியான புகார்களால், உம்மன் சாண்டியின், ‘இமேஜ்’ சரிந்தது.
இது தொடர்பாக விசாரிக்க, நீதிபதி சிவராஜன் தலைமையிலான விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. நான்கு ஆண்டு நடந்த விசாரணைக்கு பின், அந்த கமிஷன், சமீபத்தில், தன் அறிக்கையை, அரசிடம் அளித்தது.
இதன் அடிப்படையில், சட்ட ஆலோசனை பெற்ற பின், உம்மன் சாண்டி மற்றும் முன்னாள் அமைச்சர்கள் மீது, பாலியல் பலாத்காரம் மற்றும் மோசடி வழக்குகள் பதிவு செய்ய, பினராயி விஜயன் தலைமையிலான அரசு முடிவு செய்துள்ளது.
உம்மன் சாண்டி, முன்னாள் அமைச்சர்கள், முகம்மது, அடூர் பிரகாஷ், அனில் குமார், முன்னாள் மத்திய அமைச்சர் வேணுகோபால் மற்றும், எம்.எல்.ஏ.,க்கள், போலீஸ் உயரதிகாரிகள் உட்பட, 14 பேர் மீது, பாலியல் பலாத்காரம் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த, 14 பேரில், தி.மு.க.,வைச் சேர்ந்த, முன்னாள் மத்திய அமைச்சர் ஒருவரது பெயரும் இடம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கேரள அரசின் இந்த நடவடிக்கையால், அதிர்ச்சி அடைந்துள்ள காங்., மேலிடம், கேரள

(Visited 6 times, 1 visits today)
இந்த பதிவை முழுமையாக படிக்க

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *