வடசென்னை படத்தின் முதல் பாகம் நிறைவு

http://cinema.dinakaran.com/cine-news-details.aspx?id=25162&id1=3

10/10/2017 3:37:27 PM

பொல்லாதவன், ஆடுகளம் படத்துக்குப் பிறகு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் திரைப்படம் வடசென்னை. இந்த படத்தின் படப்பிடிப்பின் முதல் பாகம் முடிவு பெற்றுள்ளதாக தெரிகிறது. மொத்தம் மூன்று பாகங்களாக இந்தப் படம் தயாராகி வருகிறது. வடசென்னை படத்தில் தனுஷுடன், ஆண்ட்ரியா, ஐஸ்வராய் ராஜேஷ், அமீர், சமுத்திரக்கனி, கருணாஸ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

வடசென்னை தாதா வாழ்க்கையைப் பற்றிய படமாக உருவாகி வருகிறது. ஒரு ரவுடியின் 30 வருட வாழ்க்கையை படம்பிடித்துக் காட்டும் என்கிறார்கள். இதில், முதல் பாகம் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டதாம். இது முடிந்ததும், பாலாஜி மோகன் இயக்கும் ‘மாரி 2’ படத்தில் நடிக்க இருக்கிறார் தனுஷ். தனுஷ் தயாரித்து வரும் படத்தை லைகா நிறுவனம் வெளியிடவுள்ளது.

(Visited 1 times, 1 visits today)

<pre>இந்த பதிவை முழுமையாக <a href="http://cinema.dinakaran.com/cine-news-details.aspx?id=25162&id1=3" target="_blank">படிக்க</a></pre>

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *