வக்கீல், தியேட்டர் ஆர்ட்டிஸ்ட், கைவினை கலைஞர் : ஸ்ரத்தா ஸ்ரீநாத்

http://cinema.dinakaran.com/cine-news-details.aspx?id=24660&id1=3

8/13/2017 1:49:59 AM

தமிழில் காற்று வெளியிடை, இவன் தந்திரன், விக்ரம் வேதா படங்களில் நடித்தவர், ஸ்ரத்தா ஸ்ரீநாத். கன்னட வரவு. இப்போது நிவின் பாலியுடன் ரிச்சி படத்தில் நடிக்கிறார். நடிகை என்பதை தவிர, பல முகங்களை கொண்டிருக்கிறது இவரது மறுமுகம். இது பற்றி அவர் பேசினார்.“நான் காலேஜ்ல படிக்கிறப்ப, மேடை நாடகங்கள்ல நடிக்க ரொம்ப ஆர்வம் காட்டுவேன். காரணம், ஸ்டேஜ்ல நின்னு நடிக்கிறப்ப, நம்மையறியாம நமக்கு ஒரு தைரியம் வரும். பேச்சு சரளமா இருக்கும். எவ்வளவு பேர் இருந்தாலும், நமக்கு கொடுத்த டயலாக்கை மறக்காம பேசி நடிக்கிறப்ப கிடைக்கிற ஆடியன்சோட கைத்தட்டல், செம எனர்ஜியா இருக்கும். ஸ்கூல்ல படிக்கிறப்ப ஆர்ட் அன்ட் ஹேண்ட்கிராஃப்ட்ல ரொம்ப தீவிரமா ஈடுபட்டேன். அதுக்கான பலன் இப்ப கிடைச்சிருக்கு.

என்னை ஒரு நடிகையாவே நான் நினைக்க மாட்டேன். ஒரு சாதாரண பெண்ணா, நல்ல மனிதாபிமானியா இருந்தாலே போதும். நான் ஸ்டேஜ் பிளே பண்றப்ப, மத்தவங்க நடிக்கிறதையும் கூர்ந்து கவனிப்பேன். அப்பதான், என் நடிப்புல குறையிருந்தா உடனே நிவர்த்தி பண்ண முடியும். எனக்கு ஒரு நியாயமான ஆசை இருக்கு. நானே சொந்தமா ஸ்கிரிப்ட் எழுதி வெச்சிருக்கேன். அந்த மேடை நாடகத்தை நானே டைரக்‌ஷன் பண்ணணும். அதுல மத்தவங்களை நடிக்க வெச்சு, அவங்க திறமையை உலகத்துக்கு சொல்லணும். இந்த ஆசை கூடிய சீக்கிரம் நிறைவேறும்னு நம்பறேன். இப்ப நான் சினிமாவுல ரொம்ப பிசியா இருக்கேன். ஸோ, டைரக்‌ஷன் திட்டம் தள்ளிப்போய்க்கிட்டே இருக்கு.

பெங்களூருல பிஎல் படிச்சு, லாயரா பிராக்டிஸ் பண்ணி, ஒரு கம்பெனியில நல்ல சம்பளத்துக்கு வேலை பார்த்தேன். ரெண்டு வருஷத்துக்கு பிறகு அந்த வேலையை விட்டுட்டேன். அதுக்கு பிறகுதான், கோஹினூர் என்ற மலையாளப் படத்துல அறிமுகமானேன். பிறகு கன்னடம், தமிழ், தெலுங்கு படங்கள்ல நடிக்க

(Visited 5 times, 1 visits today)

<pre>இந்த பதிவை முழுமையாக <a href="http://cinema.dinakaran.com/cine-news-details.aspx?id=24660&id1=3" target="_blank">படிக்க</a></pre>

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *