மோடியின் ஜி.எஸ்.டி போனஸ் – முடங்கியது லாரி – உயர்கிறது விலைவாசி

http://www.vinavu.com/2017/08/11/gst-is-miserable-for-the-transport-and-logistics-sector/

ந்தியா முழுவதும் தொழில் துறையில் மிக முக்கிய பங்குவகிக்கிறது லாரி போக்குவரத்து துறை. உற்பத்தி பொருட்களை எடுத்துச் செல்ல பயன்படும் சரக்கு லாரிகளின் தேவை அதிகரித்துக் கொண்டேயிருக்கிறது. இதில் பெரும் உரிமையாளர்கள் தவிர்த்து ஒன்றிரண்டு லாரி வைத்துள்ள சிறு முதலாளிகள் மற்றும் அவற்றை சார்ந்த தொழிலாளிகள் என லட்சக்கணக்கான மக்கள் இத்தொழிலை நம்பியுள்ளனர்.

இந்த சமூகம் தடைபடாமல் இயங்க, தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கும் லாரிகள், தேசிய நெடுஞ்சாலைகளில் பழுதாகி நிற்கும் காட்சிகளை நாம் பார்த்திருப்போம். அதனை பழுது நீக்கி எடுத்துச் செல்ல லாரி ஓட்டுனர்கள் படும் பாடு பெரும் திண்டாட்டம் தான். மத்திய அரசின் தற்போதைய ஜிஎஸ்டி வரி விதிப்பால் இத்தொழிலைச் சார்ந்து இயங்கும் பல லட்சம் பேர் கடும் நெருக்கடிக்கு ஆளாகியிருக்கின்றனர்.

தொடர் பயன்பாட்டால் தேய்மானம் அடையக்கூடிய  லாரிகளின் டயர், பேரிங் உள்ளிட்ட உதிரி பாகங்களுக்கு ஜிஎஸ்டி -யில் 28 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளதால், லாரி உதிரி பாகங்களின் விலை உயர்ந்துள்ளது.

இது குறித்து மாநில லாரி உரிமையாளர்கள் சங்க இணை செயலாளரும், கோவை லாரி உரிமையாளர்கள் சங்க தலைவருமான கலியபெருமாள்  “தினகரன்” நாளிதழிடம் கூறுகையில்: “தமிழகத்தில் 1.50 லட்சம் லாரிகள் உள்ளன. இவற்றில் பாதிக்கும் மேற்பட்டவை பழைய லாரிகள். இதனை பழுது நீக்கித்தான் பராமரித்து வந்தனர். இந்நிலையில் கடந்த ஜூலை 1 -ம் தேதி முதல் ஆட்டோமொபைல் உதிரிபாகங்களுக்கு ஜிஎஸ்டி 28% வரி விதிப்பால் உதிரிபாகங்களின் விலை முன்பை விட பதினைந்து மடங்கு அதிகரித்து உள்ளது.

உதாரணமாக, லாரியின் முன்பக்க டயர் விலை ஒரு ஜோடி முன்பு இருபத்தி எட்டாயிரம் முதல் முப்பதாயிரம் வரை இருந்தது. தற்பொழுது முப்பந்தி ஐந்தாயிரம் வரை உயர்ந்துள்ளது. லாரியின் பின்புறம் பொருத்தப்படும் நைலான் ஃபைபர் டயர் ஒரு ஜோடி

(Visited 6 times, 1 visits today)
இந்த பதிவை முழுமையாக படிக்க

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *