மேக்னா ராஜுக்கு அக்டோபர் 22-ல் நிச்சயதார்த்தம்?

http://cinema.dinakaran.com/cine-news-details.aspx?id=25192&id1=3

10/12/2017 5:20:51 PM

தமிழில் காதல் சொல்ல வந்தேன் படம் மூலம் அறிமுகமானவர் மேக்னா ராஜ். இவர் மலையாளம், கன்னட படங்களில் நடித்து வந்தார். இந்நிலையில் கன்னட நடிகர் சிரஞ்சீவி சார்ஜாவுடன் ஆட்டகரா என்ற படத்தில் நடித்தனர். அப்போது இருவருக்குள்ளும் காதல் மலர்ந்தது. அதை பற்றி முதலில் செய்திகள் வெளியாகிய போது வழக்கம் போல் மறுத்து வந்தனர். இந்நிலையில் இவர்கள் திருமணம் செய்துகொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதாவது சிரஞ்சீவி சார்ஜா – மேக்னா ராஜ் திருமண நிச்சயதார்த்தம் அக்டோபர் 22-ம் தேதி நடைபெற உள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. அதிகாரப்பூர்வமாக சிரஞ்சீவி சார்ஜா தனது பிறந்த நாள் அன்று தெரிவிப்பார் என்று தெரிகிறது. மேக்னா ராஜ் தற்போது மலையாளத்தில் மூன்று படங்களில் நடித்து வருகிறார். 

(Visited 1 times, 1 visits today)

<pre>இந்த பதிவை முழுமையாக <a href="http://cinema.dinakaran.com/cine-news-details.aspx?id=25192&id1=3" target="_blank">படிக்க</a></pre>

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *