மீசை கூட முளைக்காத காலம்: லாலு மகன் பேட்டி

http://www.dinamalar.com/news_detail.asp?id=1810594

Advertisement பதிவு செய்த நாள் 12 ஜூலை
2017
14:47

பாட்னா: ” மீசை கூட முளைக்காத காலத்தில் நான் ஊழல் செய்ததாக கூறுவது தவறு,” என, பீஹார் மாநில துணை முதல்வரும், லாலு பிரசாத் யாதவின் மகனுமான தேஜஸ்வி கூறியுள்ளார்.

சி.பி.ஐ., வழக்கு

ராஷ்டிரீய ஜனதா தள தலைவர் லாலு, ரயில்வே அமைச்சராக இருந்த போது ஓட்டல்களுக்கு உரிமம் பெற்று இருந்தார். இதில் கிடைத்த லஞ்ச பணத்தை கொண்டு மூன்று மனைகளை வாங்கி உள்ளார். அதில் ஒரு மனையின் உரிமையாளர் தேஜஸ்வி என சி.பி.ஐ., குற்றம் சாட்டி உள்ளது. லாலு வீடு உள்ளிட்ட பல இடங்களில் சோதனை நடத்தியும் உள்ளது.இதையடுத்து துணை முதல்வர் பொறுப்பில் இருந்து தேஜஸ்வி விலக வேண்டும் என பீஹார் முதல்வர் நிதிஷ்குமார் மறைமுகமாக கூறியுள்ளார். ஆனால், ‘ எனது மகன் ராஜினாமா செய்ய மாட்டான்’ என, லாலு கூறியுள்ளார். எனினும், இந்த விஷயத்தில் நான்கு நாட்களில் இறுதி முடிவு எடுக்கும்படி, முதல்வர் நிதிஷ்குமார் தரப்பில் இருந்து லாலுவிற்கு கெடு விதிக்கப்பட்டுள்ளது.

தேஜஸ்வி பேட்டி

இந்த சூழ்நிலையில் பாட்னாவில் இன்று( ஜூலை, 12) அமைச்சரவை கூட்டம் நடந்தது. இதில் துணை முதல்வர் தேஜஸ்வியும் பங்கேற்றார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு, நான் அமைச்சரான பிறகு நான் எந்த தவறும் செய்யவில்லை. என் தந்தை ரயில்வே அமைச்சராக இருந்த போது, எனக்கு 13 – 14 வயது இருக்கும். அந்த வயதில் எந்த தவறையும் செய்து இருக்க முடியுமா? அப்போது நான் எந்த பொறுப்பிலும்

(Visited 4 times, 1 visits today)
இந்த பதிவை முழுமையாக படிக்க

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *