மாகாண சபைத் தேர்தல் திருத்தச் சட்டமூலம் முறையாகவே நிறைவேற்றப்பட்டது: கரு ஜயசூரிய

http://www.vannionline.com/2017/10/blog-post_67.html

மாகாண சபை தேர்தல் திருத்த சட்டமூலம் பாராளுமன்ற நிலையியல் சட்டங்களுக்கு அமைவாகவே நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

மாகாண சபை தேர்தல் வாக்கெடுப்பு சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் செயற்பாடு தொடர்பில் மக்கள் மத்தியில் போலியான கருத்து நிலவி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக இன்று திங்கட்கிழமை பாராளுமன்றத்தில் விளக்கமளித்த போதே சபாநாயகர் இந்த விடயங்களை தெரிவித்துள்ளார்.

முற்றுபெறாத திருத்த சட்டமூலத்தை முழுமையாக நிறைவேற்றுவதற்கு குறிப்பிடத்தக்க கால அவகாசம் தேவைப்பட்டதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

(Visited 1 times, 1 visits today)
இந்த பதிவை முழுமையாக படிக்க

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *