பரோல் கேட்டு சசிகலா மீண்டும் மனு தாக்கல்

http://www.dinamalar.com/news_detail.asp?id=1868857
Advertisement

பதிவு செய்த நாள்

05 அக்
2017
01:42

 பரோல் கேட்டு சசிகலா மீண்டும் மனு தாக்கல்

பெங்களூரு:’பரோல்’ வழங்கக் கோரி, போதிய ஆவணங்களுடன், இரண்டாவது முறையாக, சசிகலா மனு தாக்கல் செய்துள்ளதையடுத்து, ஆட்சேபனை இல்லா சான்றிதழ் வழங்கக் கோரி, சென்னை நகர போலீஸ் கமிஷனருக்கு, கர்நாடக சிறைத்துறை, நேற்று கடிதம் எழுதியுள்ளது.

சொத்து குவிப்பு வழக்கில், நான்கு ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா, கர்நாடக மாநிலம், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.இவரது கணவர் நடராஜன், 74,கல்லீரல், சிறுநீரக செயலிழப்பால் சென்னை மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நடராஜனின் உடல் நிலை மோசமடைந்துள்ளதாக, மருத்துவமனை கூறியுள்ளது. இதை கேள்விப்பட்ட சசிகலா, அவரை பார்ப்பதற்காக, 15 நாள், ‘பரோல்’ வழங்கக் கோரி, பரப்பன அக்ரஹாரா
மத்திய சிறை கண்காணிப்பாளர் சோமசேகரிடம், நேற்று முன்தினம் மனு தாக்கல் செய்தார்.
‘நடராஜன் உடல் நிலை சரியில்லாததாக கூறப்படும் காரணம் உண்மை’ என, அவர் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனை வட்டாரத்திலுள்ள அதிகாரி உறுதிப்படுத்தும் ஆவணத்தை, சசிகலா தாக்கல் செய்யாததால், மனுவை, சிறைத்துறை அதிகாரிகள் நிராகரித்தனர்.

இதையடுத்து, சிறைத்துறை கேட்ட ஆவணங்கள் இணைக்கப்பட்டு, சசிகலா தரப்பில், நேற்று மாலையில், அவர் வக்கீல்கள், இரண்டாவது முறையாக, புதிய மனுவை தாக்கல் செய்தனர்.
இது குறித்து சிறை கண்காணிப்பாளர், சோமசேகர் கூறியதாவது:தேவையான ஆவணங்களுடன், ‘பரோல்’ கேட்டு, சசிகலா, புதிய மனு தாக்கல் செய்துள்ளார். ஆட்சேபனை இல்லா சான்றிதழ் கோரி, சென்னை நகர போலீஸ் கமிஷனருக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.

அவர் அளிக்கும் தகவலின் அடிப்படையில்,சசிகலாவுக்கு பரோல் வழங்குவது குறித்து முடிவு எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார். சசிகலாவுக்கு ‘பரோல்’ வழங்க ஆட்சேபனை இல்லை என சென்னை நகர போலீஸ் கமிஷனர் அனுமதி வழங்கினால் சொத்து குவிப்பு வழக்கை விசாரித்த பெங்களூரு சிட்டி சிவில் சிறப்பு நீதிமன்றத்தில் கர்நாடக சிறை அதிகாரிகள் முறையிட்டு முறைப்படி அனுமதி பெறுவர்.

சசிகலாவுக்கு, ‘பரோல்’ அனுமதி கிடைத்தால், அவருடன் எத்தனை போலீசாரை பாதுகாப்புக்கு அனுப்புவது என்பது உட்பட பல விஷயங்கள் குறித்து, சிறைத்துறை அதிகாரிகள் ஆலோசித்து
வருகின்றனர்.

Advertisement

Advertisement
(Visited 1 times, 1 visits today)
இந்த பதிவை முழுமையாக படிக்க

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *