பட விழாக்களை புறக்கணிக்கும் நடிகைகள் மீது நடவடிக்கை பாய்கிறது?

http://cinema.dinakaran.com/cine-news-details.aspx?id=24659&id1=3

8/13/2017 1:31:01 AM

நடித்த படங்களின் விழாக்களுக்கே வர மறுக்கும் ஹீரோயின்கள் அதிகரித்து வருகின்றனர். இதனால் பட புரமோஷன் பாதிக்கப்படுவதாக தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் குற்றம்சாட்டுகின்றனர். சில தினங்களுக்கு முன் சதுர அடி 3500 படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி நடந்தது. இந்த படத்தில் முக்கிய வேடம் ஏற்ற ரகுமானும் நிகழ்ச்சிக்கு வரவில்லை. ஹீரோயினாக நடித்துள்ள இனியாவும் வரவில்லை. விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பாக்யராஜ் பேசும்போது, ‘விழாவுக்கு வராததால் படத்துக்கு எந்த நஷ்டமும் கிடையாது. இனியாவுக்குதான் நஷ்டம். இங்கு வந்த எல்லோருமே இதை குறிப்பிட்டு பேசினார்கள். இதுவே தவறு செய்ததை அவருக்கு உணர்த்தும்’ என்றார். காலில் ஏற்பட்ட லேசான காயத்தால் தான் வரவில்லை என அவசரம் அவசரமாக இதற்கு விளக்கம் அளித்தார் இனியா. இதேபோல் சமீபத்தில் நடந்த கதாநாயகன் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கேத்ரின் தெரசா பங்கேற்கவில்லை.

சமீபத்தில் நடந்த பல பட விழாக்களில் சம்பந்தப்பட்ட ஹீரோயின்களை காணவில்லை. பட புரமோஷனுக்கு வரவே முடியாது என முதலிலேயே கறாராக சொல்லிவிடும் நடிகைகளும் உள்ளனர். கடைசி நேரத்தில் பின்வாங்கும் நடிகைகளும் இருக்கிறார்கள். நயன்தாரா, காஜல் அகர்வால், ஹன்சிகா உள்ளிட்டோர் பட விழாக்களில் பங்கேற்க முடியாது என முதலிலேயே கூறிவிடுகிறார்கள். தமன்னா முதல் ரெஜினா, கேத்ரின் தெரசா வரை தங்கள் முடிவை சொல்லாமல் இழுபறி மனநிலையுடனே இருக்கிறார்கள். கடைசி நேரத்தில் ஜூட் விடுவது இவர்களது வாடிக்கை. கண்டிப்பாக வர முடியாது முன்கூட்டியே நடிகைகள் கறாராக சொல்வதற்கும் வருகிறேன் என சொல்லிவிட்டு, கடைசி நேரத்தில் ஏமாற்றுவதற்கும் காரணம் ஒன்றுதான். அது, தனி சம்பளம். நாங்கள் படத்தில் நடிக்கவே சம்பளம் வாங்குகிறோம். படத்தை புரமோட் செய்வது எங்கள் வேலை கிடையாது.

அப்படி படத்துக்கு விளம்பரம் செய்ய வேண்டுமென்றால் அதற்கு தனியாக சம்பளம் தர வேண்டும் என

(Visited 8 times, 1 visits today)

<pre>இந்த பதிவை முழுமையாக <a href="http://cinema.dinakaran.com/cine-news-details.aspx?id=24659&id1=3" target="_blank">படிக்க</a></pre>

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *