நீட் : ஏழைகளுக்கு எதிரான மனுநீதி ! புதிய கலாச்சாரம் மின்னூல்

http://www.vinavu.com/2017/10/12/puthiya-kalacharam-october-2017-booklet/

னிதாவின் மரணம், “ஏழைகளின் பால் அக்கறை கொண்ட மருத்துவர்கள் இனி தமிழகத்திற்கு கிடைப்பார்களா” என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறது. நீட் தேர்வை எதிர்த்தும் அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டும் போர்க்குணமிக்க முறையில் ஒரு மாத அளவில் தமிழக மாணவர்கள் போராடினார்கள்.

நீட் தேர்வு என்பது ஏதோ ஒரு சில மாணவர்களுக்கு மருத்துவ கல்லூரி சீட் கிடைப்பது தொடர்பான பிரச்சினை அல்ல. வருங்காலத்தில் அரசு மருத்துவமனை என ஒன்று இருக்குமா, அப்படி இருந்தாலும் அங்கே மருத்துவர்கள் இருப்பார்களா, இலவச மருத்துவம் என்பது பெயரளவுக்காவது இருக்குமா என்பது பற்றிய பிரச்சினைதான் நீட் தேர்வு.

தமிழகத்தில் உள்ள அளவு அரசு மருத்துவக் கல்லூரிகள் இந்தியாவின் வேறு எந்த மாநிலத்திலும் கிடையாது. அதேபோல, ஏராளமான குறைபாடுகள் இருந்தாலும்,  தமிழகத்தில் இருக்கும் அளவுக்கு அரசு மருத்துவமனைகள் வேறு எந்த மாநிலத்திலும் கிடையாது. நீட் தேர்வு தொடர்ந்தால், தமிழகத்தின் அரசு மருத்துவக் கல்லூரிகளில் குறைந்த கட்டணத்தில் படித்து டாக்டர் பட்டம் பெற்ற பணக்கார வீட்டுப்பிள்ளைகளும், பிற மாநிலத்தைச் சேர்ந்தவர்களும் படித்து முடித்து விட்டு அமெரிக்காவுக்கும், டெல்லிக்கும், மும்பைக்கும் பறந்து விடுவார்கள். அரியலூரிலும் பெரம்பலூரிலும் வேலை பார்க்க மருத்துவர்கள் இருக்க மாட்டார்கள்.

மற்ற அரசுத்துறைகள் தனியார்மயமாக்கப் படுவதைப்போல, அரசு மருத்துவமனைகளும் தனியார் மயமாக்க முனைந்திருக்கிறது மோடி அரசு இது கற்பனை அல்ல, அரசு மருத்துவமனைகளின் பல்வேறு துறைகளை, அப்போலோ போன்ற கார்ப்பரேட் மருத்துவமனைகளுக்கு 30 ஆண்டு குத்தகைக்கு விடவேண்டும் என்று மோடி உருவாக்கிய நிதி ஆயோக் அமைப்பு அறிவித்திருக்கிறது. கரையான் புற்றெடுக்க கருநாகம் நுழைந்தது போல, தமிழக மக்கள் வரிப்பணத்தில் உருவாக்கப்பட்ட அரசு மருத்துவமனைகளையும் மருத்துவக்கல்லூரிகளையும் அபகரிப்பதுதான் இந்த நீட் தேர்வின் நோக்கம். “தகுதி, திறமை, அதற்காகத்தான் நீட் தேர்வு” என்பதெல்லாம் மோடி அரசின் பம்மாத்து,

(Visited 1 times, 1 visits today)
இந்த பதிவை முழுமையாக படிக்க

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *