நவம்பர் 9ம் தேதி இமாச்சல் சட்டப்பேரவை தேர்தல்: தேர்தல் ஆணையர் ஏகே ஜோதி அறிவிப்பு

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=342765

டெல்லி: குஜராத், இமாச்சல்பிரதேஷ் மாநில சட்டப்பேரவைக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.  டெல்லியில் தேர்தல் தேதியை தலைமை தேர்தல் ஆணையர் ஏகே ஜோதி அறிவித்தார். அதன்படி இமாச்சலில் வரும் நவம்பர் 9ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல்  குஜராத் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தேதி வரும் திங்கட்கிழமை அறிவிக்கப்படும். எனினும் குஜராத்தில் வரும் டிசம்பர் 18க்கு முன்பாக பொதுத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 182 சட்டப்பேரவை தொகுதிகள் கொண்ட குஜராத் பேரவையின் பதவிக்காலம் வரும் ஜனவரி 22ம் தேதியோடு முடிவடைகிறது. 3வது முறையாக குஜராத்தில் பாஜக ஆட்சி நடக்கிறது. இதேபோல் 68 தொகுதிகளை கொண்ட இமாச்சலில் காங்கிரஸ் ஆட்சி நடைபெறுகிறது. ஜனவரி 7ம் தேதி இமாச்சல் பேரவையின் பதவிக்காலம் முடிவடைகிறது.

அக்.16ம் தேதி வேட்புமனுதாக்கல்

இமாச்சலில் அக்.16ம் தேதி முதல் வேட்புமனுதாக்கல் செய்யலாம். அக்.23ம் தேதி வேட்புமனுதாக்கல் செய்ய கடைசி நாளாகும். அக்.26ம் தேதி வேட்பு மனுவை  திரும்பப்பெற கடைசி நாளாகும்.

டிசம்பர் 18ம் தேதி வாக்கு எண்ணிக்கை

நவம்பர் 9ம் தேதி நடக்கும் இமாச்சல் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 18ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்தார்.

அனைத்து வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமரா

தேர்தல் குறித்து தலைமை தேர்தல் ஆணையர் தெரிவித்ததாவது: தேர்தல் நடத்தை விதிகள் உடனே அமலுக்கு வருகின்றன. இமாச்சலப் பிரதேசத்தில் 7,521 வாக்குச்சாவடிகள் அமைக்கபடும். அனைத்து வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும். வேட்புமனு தாக்கல் முழுவதும் வீடியோ பதிவு செய்யப்படும். தேர்தல் பாதுகாப்புக்காக மாநில காவல்துறையினருடன்  அதிகளவில் துணை ராணுவம் பயன்படுத்தப்படும். இமாச்சலில் அனைத்து வாக்காளர்களுக்கும் ஒப்புகை சீட்டு வழங்கப்படும். மேலும் குஜராத்தில் ஒவ்வொரு தொகுதியிலும் ஒரு வாக்கு சாவடியில் ஒப்புகை சீட்டு தரும் வாக்கு இயந்திரம் வைக்கப்படும். மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க சிறப்பு

(Visited 1 times, 1 visits today)
இந்த பதிவை முழுமையாக படிக்க

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *