நடிக்க வாய்ப்பு கேட்டால் நடிகைகளை படுக்கைக்கு அழைப்பதா? ராதிகா ஆப்தே

http://cinema.dinakaran.com/cine-news-details.aspx?id=25190&id1=3

10/12/2017 4:32:53 PM

‘கபாலி’யில் ரஜினி ஜோடியாக நடித்தவர் ராதிகா ஆப்தே. தமிழில் படங்களை குறைத்துக் கொண்டு இந்தி மற்றும் ஆங்கில படங்களில் நடித்து வருகிறார். கதைக்கு தேவைப்பட்டால் டாப்லெஸ் ஆகவும் நடிக்கிறார். வெளிநாட்டில் வெளியாகும் ஆங்கில குறும்படமொன்றில் நிர்வாண காட்சியிலும் நடித்தார். தவிர இணைய தள பக்கங்களில் அடிக்கடி தனது கவர்ச்சி படங்களையும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். சமீபத்தில் ராதிகா ஆப்தே அளித்த பேட்டியில், தென்னிந்திய படவுலகில் நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் கலாச்சாரம் இருப்பதாக தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் கூறியது:

தென்னிந்திய படங்களில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் நிலை உள்ளது. பட வாய்ப்புக்காக என்னையும் ஒரு தயாரிப்பாளர் படுக்கைக்கு அழைத்தார். அதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். பிறகு அவரை உதாசீனப்படுத்திவிட்டு சென்றுவிட்டேன். தென்னிந்திய படங்களில் எனக்கு அதிக வாய்ப்பு வருவதில்லை என்றுதான் நினைக்கிறேன். இவ்வாறு ராதிகா ஆப்தே கூறினார்.

(Visited 2 times, 1 visits today)

<pre>இந்த பதிவை முழுமையாக <a href="http://cinema.dinakaran.com/cine-news-details.aspx?id=25190&id1=3" target="_blank">படிக்க</a></pre>

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *