தொழில்துறையை மேம்படுத்துங்கள் மோடிக்கு பொருளாதார குழு ஆலோசனை

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=342783

புதுடெல்லி: தொழில் துறையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு பொருளாதார ஆலோசனைக்குழு ஆலோசனை வழங்கியுள்ளது. நாட்டின் பொருளாதார விவகாரங்களில் பிரதமருக்கு ஆலோசனை அளிப்பதற்காக ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் பொருளாதார ஆலோசனைக்குழு என்ற ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டது. பாஜ தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்த பிறகு இந்த குழு கலைக்கப்பட்டது. பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜிஎஸ்டி வரிவிதிப்பு ஆகியவற்றால் பொருளாதாரம் சரிந்துள்ள நிலையில் 3 ஆண்டுகால இடைவெளிக்கு பின்னர் பொருளாதார ஆலோசனை குழு மீண்டும் அமைக்கப்பட்டுள்ளது. குழுவின் தலைவராக நிதி ஆயோக் உறுப்பினர் விவேக் தேவ்ராய் நியமிக்கப்பட்டுள்ளார். இதன் முதல் கூட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்றது. இந்த குழுவில் நிதி ஆயோக் தலைமை ஆலோசகர் ரத்தன் வாட்டாள், பொருளாதார வல்லுநர்கள் சுர்ஜித் பல்லா, ரத்தின் ராய், ஆஷிமா கோயல் இடம் பெற்றுள்ளனர். மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியனும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றார். நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவது குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படடன.

கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களிடம் விவேக் தேவ்ராய் கூறியதாவது: நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக சிறப்பான பரிந்துரைகளை பிரதமரிடம் அளிக்க இருக்கிறோம். பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அதே நேரத்தில் நிதி பற்றாக்குறையை குறைப்பதற்காக எடுக்கப்படும் முயற்சிகளில் பின்வாங்கக்கூடாது எனவும் யோசனை தெரிவிக்க இருக்கிறோம். முக்கியமாக தொழில்துறையை மேம்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். எங்கள் குழுவின் முதல் கூட்டம் இது. அடுத்ததாக தொழில்துறையினர் உள்பட பல்வேறு தரப்பினை சந்திக்க இருககிறோம். அடுத்த மாதம் மீண்டும் ஒரு முறை சந்தித்து ஆலோசனை நடத்துவோம். அதை தொடர்ந்து பிரதமரிடம் எங்கள் ஆலோசனைகளை சமா்ப்பிப்போம். இந்தியா போன்ற மிகப்பெரிய நாட்டில்

(Visited 1 times, 1 visits today)
இந்த பதிவை முழுமையாக படிக்க

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *