தெலங்கானா அரசு அதிரடி நடவடிக்கை பள்ளி மாணவர்கள் புத்தக சுமைக்கு கட்டுப்பாடு

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=320485

ஐதராபாத்: பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு புத்தக சுமையை குறைக்கும் வகையில், குறிப்பிட்ட எடையளவு நிர்ணயித்து தெலங்கானா மாநில அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. பள்ளி மாணவர்கள் பாட புத்தகங்கள், நோட்டுக்கள் என கிலோ கணக்கிலான நோட்டு புத்தகங்களை தினந்தோறும் பள்ளிக்கு எடுத்து செல்கின்றனர். தொடக்க பள்ளி மாணவர்கள் சுமார் 6 கிலோ முதல் 12 கிலோ வரையிலும், உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் 17 கிலோ எடை வரையிலும் பாடப் புத்தகங்களை எடுத்து செல்கின்றனர்.

அதிக எடை கொண்ட புத்தக பைகளை முதுகில் சுமந்து செல்வதால் உடல் பிரச்னைகள் ஏற்படுவது மட்டுமின்றி மாணவர்கள் மனதளவிலும் பாதிக்கப்படுகின்றனர். இதனை கருத்தில்கொண்டு மாணவர்களின் நலனை பாதுகாக்கும் வகையில் தொடக்கப் பள்ளி முதல் உயர்நிலைப் பள்ளி வரை, மாணவர்கள் எடுத்துச்செல்லும் நோட்டு, புத்தகங்களுக்கு குறிப்பிட்ட எடை அளவை நிர்ணயம்செய்து கல்வித்துறை அதிகாரிகளுக்கு தெலங்கானா அரசு உத்தரவிட்டுள்ளது.

இதன்படி, ஒன்று முதல் இரண்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு 1.5 கிலோவுக்கு மிகாமல் நோட்டு புத்தகங்களின் எடை இருக்க வேண்டும். மூன்றாம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களின் நோட்டு புத்தகங்கள் எடை 2 முதல் 3 கிலோ இருக்க வேண்டும். 5 முதல் 7ம் வகுப்பு வரை 4 கிலோவும்,  8ம் வகுப்பு மற்றும் 9ம் வகுப்பிற்கு 4.5 கிலோவும், 10ம் வகுப்பிற்கு 5 கிலோவை விட அதிகமாக இருக்க கூடாது என்றும் அரசு குறிப்பிட்டுள்ளது.  மேலும் தொடக்கப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் கொடுக்கக் கூடாது என்றும் அரசு அறிவுறுத்தியுள்ளது.

(Visited 5 times, 1 visits today)
இந்த பதிவை முழுமையாக படிக்க

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *