தெலங்கானாவில் லாரி மீது பஸ் மோதி 5 பயணிகள் பலி

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=339775

ஐதராபாத்: ஐதராபாத் அருகே லாரி மீது அரசு பஸ் மோதியதில் 5 பேர் பலியாகினர்.தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் இருந்து விஜயவாடாவுக்கு நேற்று அதிகாலை அரசு பஸ் சென்றது. அதில் 36 பயணிகள் இருந்தனர். முனகலா என்ற இடத்தில் பஸ் சென்றபோது, முன்னால் நின்ற லாரி மீது பயங்கரமாக மோதியது. இதில், பஸ்சில் பயணம் செய்த 5 பேர் அதே இடத்தில் நசுங்கி பலியாகினர். 12 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இறந்தவர்களில் ஒருவர் பெண். பஸ்சின் ஓட்டுனரும் விபத்தில் பலியாகினார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.

(Visited 5 times, 1 visits today)
இந்த பதிவை முழுமையாக படிக்க

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *