திருமண தேதியில் திடீர் மாற்றம் : பாவனா தகவல்

http://cinema.dinakaran.com/cine-news-details.aspx?id=25181&id1=3

10/12/2017 10:44:55 AM

நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக துபாய் சென்றுள்ளார், பாவனா. அங்கு அவர் பேசியதாவது: சினிமா துறையில் எந்த தவறும் கிடையாது. அங்குள்ள சிலரின் எண்ணத்தில் அழுக்கு படிந்திருக்கிறது, அவ்வளவுதான். நிறைய நடிகர்களின் பிள்ளைகள் நடிக்க வருகிறார்கள். சினிமா துறை தவறானது என்றால், அவர்கள் தங்கள் பிள்ளைகளை சினிமாவிற்குள் வர அனுமதிப்பார்களா? சினிமா மீது எவ்வளவு நாள் நீங்கள் ஆர்வமாக இருக்கிறீர்களோ, அதுவரை அதில் எந்தத் தவறும் இருக்காது. எனது திருமணத்தைப் பற்றி கேட்கிறார்கள்.

திருமணத்தை விட அதற்குப் பிறகான என் வாழ்க்கை எவ்வாறு இருக்க வேண்டும் என்பதில்தான் அதிக கவனம் செலுத்துகிறேன். இதுவரை திருமணத்துக்காக ஆடைகளோ, வேறெந்த பொருட்களையோ வாங்க ஷாப்பிங் செல்லவில்லை. காரணம், என் திருமணத்துக்கு இன்னும் 3 மாத காலம் அவகாசம் இருக்கிறது. ஜனவரியில் என் திருமணம் நல்லமுறையில் நடக்கும்.

என் நிச்சயதார்த்த விழா 3 நாட்கள் நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால், எதிர்பாராத சம்பவங்களால் குறுகியகாலத்தில் முடிந்து விட்டது. திருமணத்துக்குப் பிறகு நடிப்பை நிறுத்த மாட்டேன்.  இவ்வாறு அவர் பேசினார். பாவனாவும், கன்னட தயாரிப்பாளர் நவீனும் காதலிக்கின்றனர். அக்டோபர் 26ம் தேதி இவர்களின் திருமணம் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், திடீரென்று ஜனவரி மாதத்துக்கு திருமண தேதி மாற்றப்பட்டுள்ளது.

(Visited 1 times, 1 visits today)

<pre>இந்த பதிவை முழுமையாக <a href="http://cinema.dinakaran.com/cine-news-details.aspx?id=25181&id1=3" target="_blank">படிக்க</a></pre>

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *