திருப்பதி கோயிலில் ஒரே நாளில் ரூ.3.09 கோடி உண்டியல் காணிக்கை: 93 ஆயிரம் பக்தர்கள் தரிசனம்

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=327047

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒரே நாளில் ரூ.3.09 கோடி உண்டியல் காணிக்கையாக கிடைத்துள்ளது. மேலும் நேற்று 93ஆயிரம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். சனி, ஞாயிறு, கிருஷ்ண ஜெயந்தி (திங்கள்), சுதந்திர தினம் (செவ்வாய்) என தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு பக்தர்களின் வருகை கடந்த வெள்ளிக்கிழமை முதல் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. கோயில் வளாகம் முழுவதும் பக்தர்களால் நிரம்பியுள்ளது. அலிபிரி மலைப்பாதையில் 14 ஆயிரம் டிக்கெட்டுகளும், வாரி ெமட்டு மலை பாதையில் 6ஆயிரம் டிக்கெட்டுகளும் வழங்கப்படுவதாகல் அதனை பெறுவதற்காக பக்தர்கள்  அதிகளவு முண்டியடித்தனர்.

பக்தர்கள் அறைகள் பெறுவதற்கு ஆதார் மற்றும் செல்போன் எண்களை வழங்கி பதிவு செய்வதற்காக 2 மணிநேரம் வரிசையில் காத்திருந்தனர். அதேபோல் அகிலாண்டம் அருகே தேங்காய் உடைத்து வழிப்பட்டால், நினைத்து நடக்கும் என்ற நம்பிக்கையின் காரணமாக நேற்று ஏராளமானோர் நீண்ட வரிசையில் நின்று தேங்காய்களை உடைத்தனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று 93 ஆயிரத்து 290 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இலவச தரிசனத்துக்கான வைகுண்டம் மையத்தில் 31 அறைகளில் பக்தர்கள் காத்திருந்தனர். அறை கிடைக்காத பக்தர்கள் வெளியே காத்திருந்தனர். இவ்வாறு காத்திருந்த பக்தர்கள் சுமார் 12 மணி நேரத்திற்கு பிறகு தரிசனம் செய்தனர்.

மலைப்பாதை வழியாக வந்து திவ்ய தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள், ₹300க்கான டிக்கெட் பெற்ற பக்தர்கள், டிக்கெட்டில் குறிப்பிட்டபடி 3 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். மேலும் 2மணி நேரம் வரிசையில் காத்திருந்து 57ஆயிரத்து 214 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர்.  நாளையும் நாளை மறுதினமும் தொடர் விடுமுறை என்பதால் பக்தர்கள் வருகை அதிகரிக்கலாம் என தெரிகிறது. நேற்றுமுன்தினம் காலை முதல் நள்ளிரவு வரை தரிசனம் செய்த பக்தர்கள் உண்டியலில்

(Visited 6 times, 1 visits today)
இந்த பதிவை முழுமையாக படிக்க

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *