திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களிடம் பணம் பெற்ற 240 தொழிலாளர் பணிநீக்கம்: தேவஸ்தான நிர்வாகம் அதிரடி

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=342773

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். பக்தர்கள் தங்கள் வேண்டுதலுக்கு ஏற்ப தலை முடியை காணிக்கை செலுத்தி வருகின்றனர். சாதாரண நாட்களில் 10 ஆயிரத்தில் இருந்து 15 ஆயிரம் பக்தர்களும், வார விடுமுறை மற்றும் விசேஷ நாட்களில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தலை முடியை காணிக்கையாக செலுத்தி வருகின்றனர். இதற்காக 2 பிரதான கல்யாண கட்டா, 12 மினி கல்யாண கட்டா தேவஸ்தானம் சார்பில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் சவர தொழிலாளர்கள் நிரந்தர பணியாளர்களாகவும், ஒப்பந்த பணியாளர்களாகவும், வாரி சேவகர்கள் என 3 பிரிவுகளாக பணிபுரிந்து வருகின்றனர்.

கல்யாண கட்டாவில் சவர தொழிலாளர்கள் வலுக்கட்டாயமாக பக்தர்களிடம் பணம் கேட்பதாக ‘டயல் யுவர் இஓ’ நிகழ்ச்சி, இ-மெயில் மூலமாக புகார் தெரிவித்து வந்தனர். இதையடுத்து செயல் அலுவலர் அனில்குமார்சிங்கால், தொழிலாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்து வந்தார். இந்நிலையில் சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து 3 முறைக்கு மேல் எச்சரிக்கை மீறி பக்தர்களிடம் பணம் வசூல் செய்ததாக பெண் மற்றும் ஆண் சவர தொழிலாளர்கள் 240பேரை பணியில் இருந்து நீக்கி, அவர்களின் பெயர்கள் கல்யாண கட்டா நுழைவு வாயிலில் ஒட்டப்பட்டிருந்தது.

(Visited 1 times, 1 visits today)
இந்த பதிவை முழுமையாக படிக்க

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *