தாத்தாக்கள் ஹீரோவாக நடிக்கலாம்; திருமணமான நடிகை நடிக்க கூடாதா? கஸ்தூரி

http://cinema.dinakaran.com/cine-news-details.aspx?id=25189&id1=3

தாத்தாக்கள் ஹீரோவாக நடிக்கலாம்; திருமணமான நடிகை நடிக்க கூடாதா? கஸ்தூரி

10/12/2017 3:54:33 PM

சினிமாவில் அதிக வாய்ப்பில்லாவிட்டாலும் இணைய தளம் மூலம் தன்னை பிஸியாக வைத்துக் கொண்டிருக்கிறார் நடிகை கஸ்தூரி. அரசியல், சினிமா என்று சகலத்திலும் மூக்கை நுழைத்து சூடான கருத்துகள் கூறி வெளுத்து கட்டுகிறார். சமீபத்தில் திருமணத்துக்கு பிறகு சமந்தா நடிப்பதாக அறிவித்துள்ளார் என்று வந்த தகவலை தனது இணைய தள பக்கத்தில் குறிப்பிட்டு, ‘அது என்ன? திருமணத்துக்கு பிறகு சமந்தா நடிக்கிறார் என்ற கேள்வி? நாக சைதன்யாவை பார்த்து ஏன் இதே கேள்வியை கேட்கவில்லை’ என்று உர்ரானார்.

கஸ்தூரியின் கருத்துக்கு ரசிகர் ஆட்சேபம் தெரிவிப்பதுபோல்,’உங்க கூட நடிச்ச ரஜினியும், கமலும் ஹீரோவா நடிக்கிறாங்க, உங்களால முடியலயே அந்த காரணம்தான்’ என்று கலாய்த்திருந்தார். ரசிகரின் கேள்விக்கு பதில் அளிக்கும் விதமாக, ‘அதுதான் எனது கேள்வியும். தாத்தாக்களை நாம் ஹீரோக்களாக ஏற்றுக்கொண்டிருக்கிறோம். ஆனால் இளம் நடிகைகள் திருமணத்துக்கு பிறகு நிராகரிக்கப்படுவது ஏன்? ஏன்? ஏன்?’ என்று குறிப்பிட்டிருந்தார்.

(Visited 1 times, 1 visits today)

<pre>இந்த பதிவை முழுமையாக <a href="http://cinema.dinakaran.com/cine-news-details.aspx?id=25189&id1=3" target="_blank">படிக்க</a></pre>

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *