தமிழகம் வரும் மத்திய மருத்துவ குழு: ஓ.பி.எஸ்.,

http://www.dinamalar.com/news_detail.asp?id=1873990

Advertisement பதிவு செய்த நாள் 12 அக்
2017
12:47

புதுடில்லி: தமிழக டெங்கு பாதிப்பு குறித்து ஆராய மத்திய மருத்துவ குழுவை அனுப்ப பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளதாக, பிரதமரை நேரில் சந்தித்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.


முதல்வர் கொடுத்து அனுப்பிய மனு

டில்லியில், இன்று பிரதமர் மோடியை, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து பேசினார். அதன் பிறகு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
பிரதமர் மோடியை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். முதல்வர் பழனிசாமி தமிழக வளர்ச்சிகள் குறித்த கோரிக்கை மனுவை கொடுத்து அனுப்பினார். அதை பிரதமரிடம் கொடுத்துள்ளேன். தமிழக மின்சார உற்பத்திக்கு கூடுதல் நிலக்கரி தரப்பட வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.


மன வருத்தம் இல்லை

என்னை தவிர பிற யாரையும் சந்திக்க பிரதமர் மறுத்து விட்டார் என்பது மீடியாக்களின் கருத்து. தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி, மத்திய மின் துறை அமைச்சரை மதியம் சந்திக்க உள்ளோம். பிரதமருடன் அரசியல் தொடர்பாக எதுவும் பேசவில்லை. தர்ம யுத்தம் முடிந்ததால் தான், இரு அணிகளும் ஒன்றாக இணைந்துள்ளன. முதல்வர் பழனிசாமியுடன் எந்த மன வருத்தமும் இல்லை. உள்ளாட்சி தேர்தல் நடத்தாததற்கும், டெங்கு ஒழிப்புக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தமிழகத்தில் டெங்கு பாதிப்பு குறித்து ஆராய, மத்திய மருத்துவ குழுவை அனுப்ப பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். எனக்கும், சேகர்ரெட்டிக்கும் எந்த தொடர்பும் இல்லை. இனிமேல், கீழ்மட்டத்தில் இருந்து உழைத்தால் தான் கட்சியில் சேர்க்கப்படுவார்கள். தினகரனுக்கு இனி அ.தி.மு.க.,வில் முக்கியத்துவம் கொடுக்க வாய்ப்பு இல்லை. முதல்வர் பழனிசாமி அனைவருடனும் கலந்து ஆலோசித்து தான் செயல்பட்டு

(Visited 5 times, 1 visits today)
இந்த பதிவை முழுமையாக படிக்க

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *