டெல்லியில் இன்று வாயில் பிளாஸ்திரி ஒட்டி விவசாயிகள் மவுன போராட்டம்

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=327055

புதுடெல்லி: டெல்லியில் இன்று வாயில் பிளாஸ்திரி ஒட்டி விவசாயிகள் மவுன போராட்டம் நடத்தினர்.காவிரி மேலாண் வாரியம் அமைத்தல், வங்கி கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த மாதம் 16ம் தேதி முதல் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று மாலை தமாகா தலைவர் ஜி.கே.வாசன், ஜம்மு காஷ்மீர் நில உரிமை சங்க மாநில தலைவர் சஞ்சய் குமார் ஆகியோர் விவசாயிகளை சந்தித்து பேசி போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனர்.இந்நிலையில் இன்று 29வது நாள் போராட்டம் நடந்தது. அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் வாயில் பிளாஸ்திரி ஒட்டி காலை 10.30 மணி முதல், 12.30 மணி வரை யாரிடமும் ேபசாமல் மவுனமாக இருந்து போராட்டம் நடத்தினர். இதுபற்றி அய்யாக்கண்ணு கூறுகையில், எங்களது போராட்டம் ஒரு மாதத்தை எட்டி விட்டது. ஆனாலும் பிரதமர் கண்டுகொள்ளவில்லை. எங்களிடம் பேசவே அவர் மறுக்கிறார். இதை உணர்த்தும் விதமாகவே நாங்கள் மவுன போராட்டம் நடத்தினோம் என்றார். விவசாயிகள் நாராயணசாமி (84), பெரியசாமி (75) ஆகியோர் இன்று 5வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். இவர்களது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதால், ஜந்தர் மந்தரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கோரிக்கைகள் நிறைவேறும் வரை உண்ணாவிரதத்தை கைவிடப்போவதில்லை என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

(Visited 5 times, 1 visits today)
இந்த பதிவை முழுமையாக படிக்க

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *