டெல்லியில் அதிகரிக்கும் மலேரியா காய்ச்சல்

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=318344

புதுடெல்லி: பொதுவாக கொசுக் கடியால் பரவும் மலேரியா, டெங்கு காய்ச்சல், சிக்குன்குனியா பாதிப்பு ஜூலை முதல் அக்டோபர் வரை இருக்கும்.   கடந்தாண்டு பருவகாலத்தை தாண்டியும் டிசம்பர் வரை கொசுக் கடியால் பரவும் மலேரியா, டெங்கு, சிக்குன்குனியா பாதிப்பு இருந்தது. கடந்தாண்டு  4,431 பேருக்கு டெங்கு காய்ச்சல் வந்தது.  டெங்கு காய்ச்சலுக்கு 21 பேரும், சிக்குன்குனியாவுக்கு 15 பேரும், மலேரியாவுக்கு 17 பேரும் பலியானார்கள்.  இந்தாண்டு  ஜனவரி 14 வரை 2 பேருக்கு சிக்குன்குனியா வந்துள்ளது.   

தெற்கு டெல்லி மாநகராட்சி புள்ளிவிவரங்கள்படி, இந்தாண்டு ஜனவரியில் 6 பேருக்கும், பிப்ரவரியில் 4 பேருக்கும், மார்ச்சில் 11 பேருக்கும் டெங்கு  காய்ச்சல் இருந்துள்ளது. இதையடுத்து கடந்த மே 13ம் தேதி முதல்வர் கெஜ்ரிவால் தலைமையில் நடைபெற்ற உயர்நிலை கூட்டத்தில் டெல்லியை  கொசுகள் இல்லாத நகரமாக மாற்ற உரிய திட்டத்தை வகுக்க முடிவானது. அரசு மருத்துவமனைகளில் 10 சதவீத படுக்கைகளை இந்த மூன்று வகை  நோயாளிகளுக்கும் ஒதுக்க உத்தரவிடப்பட்டது. இதே போன்று மத்திய அரசு மருத்துவமனைகளிலும் 10 சதவீத படுக்கைகளை ஒதுக்க மத்திய சுகாதாரத்  துறை அமைச்சர் ஜே.பி. நட்டாவும் உத்தரவிட்டார். கொசு உற்பத்தியாகும் இடங்களை அழிக்க, அபராதம் விதிக்க 200க்கும் மேற்பட்ட சிறப்பு ஆய்வு  அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஜூலை 8ம் தேதியுடன் முடிவடைந்த காலத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ேடார் எண்ணிக்கை 100ஐ தாண்டியது. இதில் கடந்த மாதத்தில் 41  பேருக்கும், ஜூலையில் 23 பேருக்கும் டெங்கு பாதிப்பு உள்ளது. இதே காலத்தில் 162  பேர் மலேரியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். இதில் 82 பேர்  டெல்லியைச் சேர்ந்தவர்கள். 161 சிக்குன்குனியா நோயாளிகளில், கடந்த மாதம் மட்டும் புதிதாக 12 பேருக்கு இது வந்துள்ளது. கொசு ஒழிப்பு  நடவடிக்கையில் அரசும் மாநகராட்சிகளும் இணைந்து செயல்பட்டபோதிலும்

(Visited 1 times, 1 visits today)
இந்த பதிவை முழுமையாக படிக்க

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *