டெங்கு : அமைச்சர் விஜயபாஸ்கர் – செயலர் இராதா கிருஷ்ணன் மீது வழக்குப் போடு ! PRPC

http://www.vinavu.com/2017/10/12/dengue-deaths-government-is-the-main-accused/

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்

நாள்:11.10.2017

பத்திரிக்கைச்   செய்தி 

டெங்கு மரணங்கள் : மிகப்பெரிய மனித உரிமை மீறல் மற்றும் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 304-A-ன் கீழ் குற்றம். மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலர் இராதாகிருஷ்ணன் மற்றும் மாநகராட்சி, நகராட்சி அதிகாரிகள் மீது வழக்குப் பதிய வேண்டும்! டெங்குவிற்கு தனியார் மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை வழங்க தமிழக அரசு உத்தரவிட வேண்டும்!

டெங்கு காய்ச்சல் மரணங்கள் தமிழக மக்களைப் பெரும் பீதியில் ஆழ்த்தியுள்ளது. மத்திய அரசின் நோய்க் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் தமிழக பொறுப்பு மருத்துவர் கல்பனா பரூபா தகவலின்படி, தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர் 11,555 பேர். இதில் நூற்றுக்கும் மேலானோர்  இறந்துள்ளனர்.

சமூகத்தின் கீழ்மட்டத்தில் உள்ள மக்களே டெங்குவால் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசு மருத்துவமனைகளில் மருந்து இல்லை, படுக்கை இல்லை, போதிய மருத்துவர்கள் இல்லை என அன்றாடம் செய்திகள் வருகின்றன.

நடவடிக்கை எடுக்க வேண்டிய தமிழக அரசாங்கமோ  வெற்று அறிக்கைகள், பேட்டிகள் மூலமே டெங்கு பிரச்சனையைக் கையாள்கிறது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, இறந்தோர் எண்ணிக்கையை மறைத்து, உண்மை விபரங்களை வெளியிட மறுக்கிறது.

இதுவே மிகப்பெரிய குற்றம்.  தமிழகத்தின் மற்ற பிரச்சனைகளில் அத்துமீறித் தலையிடும் மோடி அரசு, தமிழக மக்கள் நூற்றுக்கணக்கில் சாவது குறித்து வாய்திறக்க மறுக்கிறது. டெங்குவா? வேறு காய்ச்சலா? என்று தமிழக மருத்துவத் துறையிலே குழப்பம் நிலவும்போது, இதனை ஆய்வு செய்து உதவி செய்ய வேண்டிய மோடி அரசு வேடிக்கை பார்க்கிறது. மொத்தத்தில் தமிழக மக்கள் மத்திய, மாநில அரசுகள் இருந்தும் நாதியற்றவர்களாக உள்ளனர்.

சுகாதாரம், மருத்துவ வசதி ஆகியவை அரசியல் சட்டத்தின் அடிப்படை உரிமையான வாழ்வுரிமையின் (சரத்து 21) அங்கம் என்று உச்சநீதிமன்றம் பல்வேறு வழக்குகளில் சொல்லியுள்ளது.

(Visited 1 times, 1 visits today)
இந்த பதிவை முழுமையாக படிக்க

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *