டாப்ஸியின் நடமாடும் வீடு

http://cinema.dinakaran.com/cine-news-details.aspx?id=25176&id1=3

10/11/2017 5:01:07 PM

கோலிவுட், டோலிவுட் படங்களில் வாய்ப்புக்காக காத்திருந்த டாப்ஸி, பாலிவுட் சென்றபிறகு கைநிறைய சம்பாதிக்கத் தொடங்கி உள்ளார். கடும் போட்டிகளையும் கடந்து தனக்கென ஒரு இடத்தை தக்க வைப்பதில் தீவிர கவனம் செலுத்தியது பலன் அளித்திருக்கிறது. பேபி, பிங்க், நாம் சபானா போன்ற படங்கள் பாலிவுட்டில் அவரை அடையாளம் காட்டிய நிலையில் சமீபத்தில் வெளியான ஜூட்வா 2ம் பாகம் ஹிட்டாகி ரூ. 100 கோடி வசூல் குவித்திருக்கிறது. வெற்றியை சுவைத்த வேகத்தில் அதற்கான வசதிகளையும் அனுபவிக்க முடிவு செய்திருக்கிறார். சமீபத்தில் கேரவேன் ஒன்றை வாங்கியிருக்கும் டாப்ஸி, அதை தனது சவுகரியத்துக்கு ஏற்ப டிசைன் செய்திருக்கிறார்.

சமையல் அறை, பாத்ரூம், பெட்ரூம் என வீடுபோல் மாற்றியிருக்கிறார். குளுகுளு வசதியுடன் கூடிய இந்த கேரவேன்பற்றி அவர் குறிப்பிடும்போது தனக்கு இது இரண்டாவது வீடு என்கிறார். படப்பிடிப்புக்கு செல்லும்போது கேரவேனை கூடவே எடுத்துச் செல்லும் டாப்ஸி, ஷூட்டிங்கில் இடைவேளையில் இந்த கேரவேனுக்குள் ஏறி ரிலாக்ஸ் செய்யும்போது ரொம்பவே இதமாக உணர்வதாகவும் தெரிவிக்கிறார். இதையொரு நடமாடும் வீடாகவே அவர் பயன்படுத்துகிறார். தமிழ், தெலுங்கு பட வாய்ப்புகளும் தற்போது டாப்ஸி வீட்டு கதவை தட்டுகிறதாம்.

(Visited 1 times, 1 visits today)

<pre>இந்த பதிவை முழுமையாக <a href="http://cinema.dinakaran.com/cine-news-details.aspx?id=25176&id1=3" target="_blank">படிக்க</a></pre>

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *