டாக்டராக பரமபதம் ஆடும் த்ரிஷா

http://cinema.dinakaran.com/cine-news-details.aspx?id=25177&id1=3

10/11/2017 5:22:24 PM

நடிகை த்ரிஷா தற்போது சதுரங்கவேட்டை, கர்ஜனை, மோகினி உள்ளிட்ட படங்களில் நடித்து முடித்துள்ளார். இந்த படங்கள் விரைவில் அடுத்தடுத்து வெளியாக உள்ளது. இந்நிலையில் விஜய் சேதுபதியுடன் நடித்து வரும் 96 படத்தின் படப்பிடிப்பு முடியும் நிலையில் உள்ளது. 96 படத்தை தொடர்ந்து அறிமுக இயக்குனர் திருஞானம் இயக்கி தயாரிக்க உள்ள பரமபதம் என்ற படத்தில் நடிக்க த்ரிஷா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த படத்தில் த்ரிஷா டாக்டர் வேடத்தில் நடிக்க உள்ளார். த்ரிஷா ஏற்கனவே ஆர்யாவுடன் நடித்த சர்வம் படத்தில் டாக்டராக தான் நடித்தார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் விரைவில் வெளியாகும் என்றும், படப்பிடிப்பு இம்மாதம் 20-ம் தேதிக்கு மேல் தொடங்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

(Visited 1 times, 1 visits today)

<pre>இந்த பதிவை முழுமையாக <a href="http://cinema.dinakaran.com/cine-news-details.aspx?id=25177&id1=3" target="_blank">படிக்க</a></pre>

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *