ஜி.வி.யின் 100% காதல் படப்பிடிப்பு பூஜையுடன் தொடக்கம்

http://cinema.dinakaran.com/cine-news-details.aspx?id=25174&id1=3

10/11/2017 3:23:44 PM

தெலுங்கில் சுகுமார் இயக்கத்தில் நாக சைதன்யா, தமன்னா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான ‘100% லவ்’ படம் சூப்பர்  ஹிட்டானது. இந்நிலையில் இந்த படத்தை தமிழில் ரீமேக் செய்கிறார் அறிமுக இயக்குநர் எம்.எம்.சந்திரமௌலி. இதில் ஜி.வி.பிரகாஷ் நாயகனாகவும், இசையமைப்பாளராகவும் உள்ளார். இந்நிலையில் 100% லவ் படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் சென்னையில் தொடங்கியது.

ஜ.வி.பிரகாஷ் ஜோடியாக அர்ஜுன் ரெட்டி படத்தில் நடித்த ஷாலினி பாண்டே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த படம் கோடை விடுமுறையில் வெளியாகும் என்று தெரிகிறது. இப்படத்தின் பெரும்பகுதி காட்சிகளை லண்டனில் படமாக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இயக்குநர் சுகுமார் இப்படத்தை தயாரிக்கிறார்.

(Visited 2 times, 1 visits today)

<pre>இந்த பதிவை முழுமையாக <a href="http://cinema.dinakaran.com/cine-news-details.aspx?id=25174&id1=3" target="_blank">படிக்க</a></pre>

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *