சைதன்யாவை மணந்த வேகத்தில் பெயரை மாற்றினார் சமந்தா

http://cinema.dinakaran.com/cine-news-details.aspx?id=25186&id1=3

10/12/2017 2:17:04 PM

எம்ஜிஆர் குடும்பம், சிவாஜி குடும்பம்போல் டோலிவுட்டில் என்டிஆர் குடும்பம், நாகேஸ்வரராவ் குடும்பம் பிரபலம். நாகேஸ்வரராவ் குடும்ப பெயர்களுடன் அக்கினேனி என்ற பெயர் இடம்பெற்றிருக்கும். இந்த குடும்பத்தில்தான் வாழ்க்கைப்பட்டிருக்கிறார் நடிகை சமந்தா. நாகேஸ்வரராவ் மகன் நாகார்ஜுனா. இவரது மகன் நாக சைதன்யா. கடந்த 6ம் தேதி சமந்தா, சைதன்யா திருமணம் கோவாவில் நடந்தது. இந்நிலையில் சமந்தா தனது பெயருடன் அக்கினேனி என்ற சைதன்யாவின் குடும்ப பெயரை இணைத்துக் கொண்டிருக்கிறார்.

தனது இணைய தள பக்கங்களில் சமந்தா ருத் பிரபு என்ற பெயரைத்தான் இதுவரை சமந்தா பதிவு செய்திருந்தார். சைதன்யாவுடன் திருமணம் முடிந்த கையோடு டுவிட்டர் பக்கத்தில் சமந்தா அக்கினேனி என பெயர் மாற்றம் செய்திருக்கிறார். விரைவில் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பெயர் மாற்றம் செய்ய உள்ளார். தெலுங்கில் நடிக்கும் படங்களிலும் டைட்டிலில் இனி சமந்தா அக்கினேனி என்ற பெயரையே பயன்படுத்துமாறு தயாரிப்பாளர்களை அவர் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

(Visited 2 times, 1 visits today)

<pre>இந்த பதிவை முழுமையாக <a href="http://cinema.dinakaran.com/cine-news-details.aspx?id=25186&id1=3" target="_blank">படிக்க</a></pre>

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *