சீன ராணுவத்தினரால் கைலாஷ் யாத்ரீகர்கள் தடுத்து நிறுத்தம் : மோடி, சுஷ்மா விளக்கம் அளிக்க காங். வலியுறுத்தல்

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=314639

புதுடெல்லி : சிக்கிம் எல்லையில்  கைலாஷ் சென்ற யாத்ரீகர்கள் தடுக்கப்பட்ட விவகாரம் குறித்து மோடி, சுஷ்மா விளக்கம் அளிக்க வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. வடகிழக்கில் சிக்கிம் மாநிலத்தை ஒட்டி, இந்தியா-சீன எல்லை அமைந்துள்ளது. கடந்த 10 நாட்களாக சீன ராணுவத்தினர் சிக்கிம் எல்லையில் அத்துமீறுவதாக இந்திய ராணுவ அதிகாரிகள் நேற்று தகவல் தெரிவித்துள்ளனர். சிக்கிமின் டோகா லா பகுதியில் 10 நாட்களுக்கு முன் சீன ராணுவத்தினர் எல்லை தாண்டி வந்துள்ளனர். உடனடியாக அவர்கள் எச்சரிக்கைப்பட்டனர். ஆனால் எச்சரிக்கையை மீறி சீன ராணுவத்தினர் தொடர்ந்து முன்னேறினர். இதையடுத்து, இரு தரப்பிலும் லேசான கைகலப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் சீன ராணுவத்தினர் திருப்பி அனுப்பப்பட்டனர். முன்னதாக இந்திய வீரர்களை வீடியோ, புகைப்படம் எடுத்தும், 2 பதுங்கு குழிகளை சீன வீரர்கள் சேதப்படுத்தினர.
இதற்கிடையே, சிக்கிமின் நாதுலா பகுதி வழியாக கைலாஷ் மானசரோவருக்கு சென்ற யாத்ரீகர்களை சீன ராணுவம் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பி உள்ளது. இந்தாண்டுக்கான 50 பேர் கொண்ட முதல் குழு நாதுலா வழியாக சென்றபோது, அவர்களை கடந்த 19ம் தேதி எல்லையில் சீன ராணுவத்தினர் தடுத்து நிறுத்தி உள்ளனர். 23ம் தேதி வரை அங்கேயே காத்திருந்த பக்தர்கள், பின்னர் சிக்கிம் தலைநகர் கேங்டாக்குக்கு திரும்பினர். பயங்கர நிலச்சரிவில் பாலம் ஒன்று இடிந்துள்ளதால்தான் யாத்ரீகர்கள் அனுமதிக்கப்படவில்லை என்கிறது சீன தரப்பு.

கைலாஷ் சென்ற இந்திய யாத்ரீகர்கள் தடுக்கப்பட்ட விவகாரம் குறித்து பிரதமர் மோடி, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா கூறுகையில், சீன தரப்புடன் பேச்சு வார்த்தை நடத்தி கைலாஷ் செல்வதற்கான பாதையை உறுதி செய்ய வேண்டும். சீன பிராந்தியத்தில் மாற்று பாதையை உருவாக்கி தர சீனாவை பிரதமர் மோடி வலியுறுத்த வேண்டும். எந்த ஒரு காரணமும் இன்றி கைலாஷ் மானசரோவர் யாத்ரீகர்கள் தடுக்கப்பட்டது குறித்து பிரதமர் மோடி, வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா

(Visited 21 times, 1 visits today)
இந்த பதிவை முழுமையாக படிக்க

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *