சிறப்புக் கட்டுரை : பிக்பாஸ் ரசிக்கப்படுவது ஏன் ?

http://www.vinavu.com/2017/08/11/why-bigg-boss-is-so-popular-in-tamilnadu-part-one/

பிக்பாஸ் ஆரம்பித்து ஒன்றரை மாதமாகி விட்டது. நமது மக்கள் பல்வேறு கோணங்களில் சில பல ஆய்வுகளையே நடத்தி விட்டனர். யூ டியூப் சானல்கள் பல பிக்பாஸின் அன்றாட நடவடிக்கைகளை திடுக்கிடும் தலைப்புக்களால் போட்டு கம்பெனியை அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓட்டுகின்றனர். ஃபேஸ்புக்கிலோ முற்போக்கு, பிற்போக்கு, சமூகவியல், பெண்ணியம், உளவியல் என்று எல்லா பிரிவுகளிலும் ஆய்வுகள் வந்த வண்ணம் இருக்கின்றன.

வாட்ஸ் அப்பில் ஓவியா படை போர் முரசு கொட்டுகிறது. வார நாட்களில் டிவிட்டரிலும், வார இறுதியில் விஜய் டிவியிலும் கமலஹாசன் பேசும் தத்துவங்கள் பல சமூகவலைத்தளங்கள் மட்டுமல்ல, ஊடகங்களாலும் ஆராயப்படுகின்றன. அசைவ உணவு உண்பவர்களை முரடர்களாக கருதுகிறார், சேரி பிகேவியர் வார்த்தைகளை அனுமதிக்கிறார், மனநலம் பாதிக்கப்பட்டோர் கேலி செய்யப்படுவதை ஏற்கிறார் என்றெல்லாம் தொலைக்காட்சி விவாதங்கள் தொடர்கின்றன. அனைத்தையும் கணக்கில் கொண்டு அடுத்த வாரம் பதிலளிக்கிறார் கமல். அந்தக் குற்றங்களுக்குத் தான் காரணமில்லை என்கிறார்.

நேரடியாக போட்டி நடத்துபவர்களையும், விஜய் டிவியையும் மெல்லிய தொனியில் விமர்சிக்கிறார். மக்களுக்கோ இது போட்டி என்பதால் பொழுது போக்காக எடுத்துக் கொள்ளவும், அதே நேரம் சில வாழ்வியல் பாடங்களை கற்கலாமெனவும் முடிந்த மட்டும் வகுப்பு நடத்துகிறார்.

தஞ்சையில் மக்கள் அதிகாரம் மாநாட்டிற்கு அருகாமைப் பகுதியிலிருந்து வந்த கிராமப்புற தம்பதியினர் இரவு நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருந்தனர். திடீரென நினைவு வந்தவர்கள் போல “ஐயோ இன்று பிக்பாஸ் பார்க்க முடியாதே, ஓவியா காதல் என்னவாகும்” என்று பேசிக் கொண்டனர்.

ஒவ்வொரு நாளிலும் அந்த இளம் தம்பதியனர் இரவானதும் இரு குழந்தைகளை நல்லபடியாக தூங்க வைத்து விட்டு பிக்பாஸில் பயணிக்கின்றனர். நாள் முழுவதும் அந்தப் பெண் இரு குழந்தைகளை பராமரித்தும், வீட்டு வேலைகளில் மூழ்கியும் போகிறார். அந்தக் கணவரோ அன்றாட வணிக வேலைகளை வாடிக்கையாக செய்கிறார்.

(Visited 4 times, 1 visits today)
இந்த பதிவை முழுமையாக படிக்க

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *