சபரிமலை ஐயப்பன் கோவிலில் பெண்களை வழிபட அனுமதிக்கும் வழக்கு : அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம்

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=342938

டெல்லி: சபரிமலை ஐயப்பன் கோவிலில் பெண்களை வழிபட அனுமதிப்பது குறித்த வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த வழக்கை 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. மத சடங்குகளில் நீதிமன்றம் தலையிடலாமா என்பதை அரசியல் சாசன அமர்வு முடிவு செய்யும் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்து வந்த இவ்வழக்கு தற்போது 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் வழிபாட்டிற்கு அனுமதிக்க வேண்டும் இளம் வழக்கறிஞர் சங்கம் மனு தாக்கல் செய்தது. ஆண், பெண் வேறுபாடு காட்டுவது ஆகாது. குறிப்பிட்ட வயதுடைய பெண்களுக்கு மட்டுமே தடை விதிக்கப்பட்டுள்ளதாக தேவசம் போர்டும் மனு தாக்கல் செய்துள்ளது.

சபரிமலையில் பத்து வயதுக்கு உட்பட்ட சிறுமியரும், 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களும் மட்டுமே கோவிலுக்குள் செல்வதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இளம் வழக்கறிஞர்கள் சங்கம் என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் பெண்கள் மீதான இத்தடைக்கு இந்து மதத்துக்கும் எந்த தொடர்பும் கிடையாது. இத்தடை இந்து மதத்துக்கு முற்றிலும் எதிரானதாகும். ஒருவரை கர்ப்பக்கிரகத்தில் நுழையத்தான் தடை விதிக்க வேண்டுமே தவிர, பாலின அடிப்படையில் கோயிலுக்கு நுழையவே தடை விதிக்க முடியாது.

எனவே கேரளாவின் தடை அரசியல் சடனத்துக்கு எதிரானது என்பதால் இத்தடையை நீக்கி உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயதுடைய பெண்களும் தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்படும் என்று மார்க்சிஸ்ட் கட்சி தலைமையிலான கேரள அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தது. இதுதொடர்பான முடிவை உச்சநீதிமன்றம் கடந்த பிப்ரவரி மாதம்

(Visited 1 times, 1 visits today)
இந்த பதிவை முழுமையாக படிக்க

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *