சசிகலா பரோல் மனு தள்ளுபடி: கர்நாடக சிறைத்துறை உத்தரவு

http://www.dinamalar.com/news_detail.asp?id=1867787
Advertisement

மாற்றம் செய்த நாள்

03 அக்
2017
19:27

பதிவு செய்த நாள்
அக் 03,2017 19:15
 சசிகலா,பரோல் மனு, தள்ளுபடி,கர்நாடக,சிறைத்துறை, உத்தரவு

Share this video :
சசிகலா பரோல் மனு தள்ளுபடி
Powered by Sathya

பெங்களூரு: சசிகலாவின் பரோல் மனுவை பெங்களூரு கர்நாடக சிறைத்துறை தள்ளுபடி செய்துள்ளது. சொத்து குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் 200க்கும் மேற்பட்ட நாட்களாக அடைக்கப்பட்டுள்ளார். அவரது கணவர் நடராஜன் உடல் நல குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதால் கணவரை பார்க்க வருவதற்காக சசிகலா 15 நாள் பரோலில் செல்ல கர்நாடக மாநில சிறைத்துறையிடம் அனுமதி கோரி இருந்தார். அவரது மனு குறித்து கர்நாடக மாநில சிறைத்துறை பரிசீலனை செய்தது. மனுவில் பரோலில் செல்வதற்கான போதுமான தகவல் இல்லை எனக் கூறி, கர்நாடக சிறைத்துறை மனுவை தள்ளுபடி செய்தது.

மனு நிராகரிப்பு ஏன்

சசிகலா கணவர் நடராஜன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது உண்மை தான் என கெஜட்டட் அதிகாரிகளின் சான்றொப்பமிட்ட ஆவணங்கள் தாக்கல் செய்யவில்லை எனவே மனு தள்ளுபடி செய்யப்பட்டதாக சிறைத்துறை அதிகாரிகள் கூறினர். மேலும் கூடுதல் ஆவணங்களுடன் புதிய பரோல் மனுவை தாக்கல் செய்யுமாறு சிறைத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

Advertisement
Advertisement
(Visited 1 times, 1 visits today)
இந்த பதிவை முழுமையாக படிக்க

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *