கனமழை குறைந்ததால் மும்பையில் இயல்பு நிலை திரும்புகிறது : வெள்ளத்தில் சிக்கி 15 பேர் பலி

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=331750

மும்பை: மும்பையில் மழையின் அளவு குறைந்துள்ளதால் அந்நகர மக்களின் இயல்பு வாழக்கை திரும்புகிறது. சாலை மற்றும் ரயில் போக்குவரத்து துவங்கியுள்ளது. மும்பையை 3 நாட்களாக புரட்டி போட்ட மழை பெரும் பிரளயத்தையே ஏற்படுத்தியது. மழை, வெள்ளத்தில் சிக்கி 15 பேர் உயிரிழந்த நிலையில், 7 பேர் மாயமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வெள்ளம் தேங்கிய பகுதிகளில் தண்ணீர் வடிய துவங்கியுள்ளது. அரசு சார்பில் அமைக்கப்பட்ட 150 குழுவினர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகின்றனர்.

தண்டவாளங்களில் தேங்கிய தண்ணீர் வடிய துவங்கியதால் புறநகர் மின்சார ரயில்கள் மிதவேகத்தில் இயக்கப்பட்டு வருகின்றன.  சாலைகளில் தேங்கிய குப்பைகளால் பேருந்து போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்நிலையில் மும்பையின் பஜார் பகுதியில் உள்ள 3 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்தததில் 10 பேர் பலியாகியுள்ளனர். தொடர் மழை காரணமாக பலவீனமாக இருந்த கட்டடம் இடிந்து விழுந்திருக்கலாம் என கூறப்படுகிறது. அடுத்த 3 நாட்டளுக்கு மகாராஷ்ட்டிரா உட்பட 12 மாநிலங்களில் கனமழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. 2005-ம் ஆண்டு ஒரே நாளில் பெய்த 94 செ.மீ மழையால் மும்பை மாநகரமே தண்ணீரில் மூழ்கியது. அப்போது 1,094 பேர் உயிரிழந்தனர். தற்போது 2 நாட்களயில் மும்பையில் 48 செ.மீ மழை பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

(Visited 1 times, 1 visits today)
இந்த பதிவை முழுமையாக படிக்க

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *