ஓ.பி.எஸ்., -எடப்பாடி இடையே கருத்து வேறுபாடு அ.தி.மு.க., இரு அணிகள் இணைவதில் சுணக்கம்

http://www.dinamalar.com/news_detail.asp?id=1838662

Advertisement பதிவு செய்த நாள் 21 ஆக
2017
13:37

சென்னை : இரு அணிகள் இணைப்பிற்காகவும், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசிப்பதற்காகவும் முதல்வர் பழனிசாமி இன்று அதிமுக தலைமை அலுவலகம் வருவதாக இருந்தது. பகல் 12 மணியளவில் முதல்வர் வீட்டில் இருந்து புறப்படுவார் என கூறப்பட்டது. ஆனால் முதல்வர் அதிமுக அலுவலகம் செல்வது ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஓபிஎஸ் தரப்பினர் கட்சி அலுவலகம் புறப்படுவதிலும் தாமதம் ஏற்பட்டது. சசிகலாவை கட்சியில் இருந்து நீக்குவதற்கான உறுதிமொழிகளை எழுத்துப்பூர்வமாக அளிக்க வேண்டும் என ஓபிஎஸ் தரப்பு கேட்டுக் கொண்டதால், இரு அணிகளும் மீண்டும், மீண்டும் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் இரு அணிகள் இணைப்பில் இழுப்பறி ஏற்பட்டுள்ளது.

கடைசி நேர தாமதம் காரணமாக முதல்வர் கட்சி அலுவலகம் செய்யும் திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் மாலையில் ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் கட்சி அலுவலகம் செல்லலாம், அணிகள் இணைப்பு ஏற்படலாம் என்றும் கூறப்படுகிறது.

Advertisement Advertisement

(Visited 5 times, 1 visits today)
இந்த பதிவை முழுமையாக படிக்க

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *