எல்லையில் தீவிரவாதிகளுடன் போரிட விரைவில் களமிறங்குகின்றன ரோபோட்கள் …. : மத்திய அரசு நடவடிக்கை

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=327039

ஜம்மு: ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கு எதிராக போரிட ரோபோட்களை களமிறக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக 600-க்கும் மேற்பட்ட ரோபோட்களை உருவாக்கும் பணியில் ராணுவ ஆராய்ச்சி மையம் ஈடுபட்டுள்ளது. முதற்கட்டமாக காஷ்மீர் எல்லையில் 544 ரோபோட்கள்  ராஷ்ட்ரிய ரைபிள் படை பிரிவில் சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது. குறைவான எடை கொண்ட ரோபோட்களில் அதிநவீன கேமரா வசதி , டிரான்ஸ்மிட்டர் கருவிகள் இணைக்கப்பட்டுள்ளது. எதிரிகளின் நடமாட்டத்தை கண்காணிப்பதோடு, அவர்களின் மீது குண்டுகளை வீசவும் திறன் படைத்த இந்த ரோபோட்டுகள் மிக விரைவில் இந்திய ராணுவத்தில் இணைக்கப்பட உள்ளதாக பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ராணுவத்தின் கோரிக்கைய ஏற்று இதற்கு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

காஷ்மீரில் பனிப்படர்ந்த மலை குகைக்குள் பதுங்கும் தீவிரவாதிகள் இந்திய ராணுவத்தின் நடமாட்டத்தை வேவு பார்த்து, எதிர்பாராத நேரத்தில் திடீரென தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதில் ராணுவ வீரர்கள் பலர் உயிரிழக்க நேரிடுகிறது. இதே போல காஷ்மீரில் கல்வீசி தாக்கும் போராட்டக்காரர்களால் ராணுவ வீரர்கள் பலர் காயமடைகின்றனர். சிலர் பலியாகின்றனர். இதனை தடுக்கும் வகையிலும் தீவிரவாதிகள் மற்றும் போராட்டக்காரர்களை சமாளிக்க ரோபோக்கள் எனப்படும் இயந்திர மனிதர்களை களமிறக்க பாதுகாப்பு அமைச்சகம் முடிவெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

(Visited 8 times, 1 visits today)
இந்த பதிவை முழுமையாக படிக்க

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *