உச்ச நீதிமன்றம் 1ம் தேதி விசாரணை சிவில் சர்வீஸ் தேர்வில் 2 தவறான கேள்விகள்

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=322740

புதுடெல்லி: சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வில் 2 கேள்விகள் தவறாக கேட்கப்பட்டது தொடர்பான வழக்கை ஆகஸ்ட் 1ம் தேதி உச்ச நீதிமன்றம் விசாரிக்கிறது.  கடந்த ஜூன் 18ம் தேதி நடந்த சிவில் சர்வீஸ் முதல் நிலை தேர்வை ஆசிதா சாவ்லா என்ற பெண் எழுதினார். அதில், 2 கேள்விகள் தவறாக இடம் பெற்றிருந்ததால் அது தொடர்பாக விசாரணை நடத்த கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அதில், `தேர்வில் 2 தவறான கேள்விகள் இடம் ெபற்றிருந்தன. ஒரே கேள்விக்கு இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சரியான விடைகள் இருந்தால் அது தவறான கேள்வியாகவே கருதப்படும் என உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பு அளித்துள்ளது’ என சுட்டிக்காட்டி உள்ளார். இந்த மனு நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 3 பேர் பெஞ்ச் முன் நேற்று விசாரணைக்கு வந்தது.  இதையடுத்து, விசாரணையை ஆகஸ்ட் 1ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

(Visited 6 times, 1 visits today)
இந்த பதிவை முழுமையாக படிக்க

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *