இமாச்சல பிரதேசத்தில் பயங்கரம்: நிலச்சரிவில் சிக்கி 6 பேர் பலி

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=327065

மண்டி: இமாச்சல பிரதேசத்தில் நிலச்சரிவில் சிக்கி 6 பேர் பலியாயினர். அங்கு மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இமாச்சல பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த சூழலில் மண்டி மாவட்டத்தில் பதார் பகுதியில் ஏற்பட்ட கன மழை மற்றும் வெள்ளம் காரணமாக கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் ஏராளமான கட்டிடங்கள் மண்ணில் புதைந்தன. நிலச்சரிவில் சிக்கி 6 பேர் பலியானதாக அதிகாரிகள் தெரிவித்தனர். உடனடியாக தகவல் அறிந்த மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடல்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் நிலச்சரிவில் சிக்கி காயமடைந்த பலரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதித்துள்ளனர். இதுகுறித்து மண்டி மாவட்ட நிர்வாக துணை ஆணையர் சந்தீப் கதம் கூறுகையில், நிலச்சரிவில் சிக்கி சிலர் உயிரிழந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களின் உடல்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. நிலச்சரிவு காரணமாக நெடுஞ்சாலை முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. எனவே அப்பகுதியில் 3 வாகனங்களில் ஏராளமானோர் சிக்கி தவிப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அவர்களை மீட்கும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. இதற்கிடையில் தேசிய நெடுஞ்சாலையில் நிலச்சரிவில் சிக்கி பேருந்து ஒன்று உருண்டு விழுந்தது. இடிபாடுகளில் இருந்து 4 பேர் உயிருடன்  மீட்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து மழை பெய்து வருவதால் மீட்பு பணிகள் தொய்வடைந்துள்ளன. போலீசாரும், மீட்பு படையினரும் மிகுந்த சவாலுக்கு மத்தியில் மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். நிலச்சரிவு அபாயம் காரணமாக தேசிய நெடுஞ்சாலை 21ல் முற்றிலுமாக போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது என்றார். நிலச்சரிவில் சிக்கி 6 பேர் பலியான சம்பவம் இமாச்சல பிரதேசத்தில் பெருத்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

(Visited 4 times, 1 visits today)
இந்த பதிவை முழுமையாக படிக்க

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *