இனி வார இறுதி நாட்களில் திவ்ய தரிசனம் டிக்கெட் மற்றும் இலவச லட்டு கிடையாது: திருப்பதி தேவஸ்தானம் முடிவு

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=315085

திருப்பதி: இனி வார இறுதி நாட்களில் திவ்ய தரிசனம் டிக்கெட் மற்றும் இலவச லட்டு வழங்குவதை நிறுத்த திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் முடிவு செய்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பக்தர்கள் மலைப்பாதையில் பாத யாத்திரையாக வருவது வழக்கம். அவ்வாறு வரும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் சார்பாக மலைப்பாதையில் திவ்ய தரிசனம் டிக்கெட் வழங்கப்படுகிறது. இந்த டிக்கெட் மூலம் நடைபாதை பக்தர்களுக்கு தரிசனத்திற்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. மேலும் 1 இலவச லட்டு, 2 லட்டுகள் சலுகை விலையில் 20 ரூபாய்க்கும், கூடுதலாக 2 லட்டுகள் 25 ரூபாய்க்கும் என 5 லட்டுகள் வழங்கப்படுகிறது. 2014 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் இலவசமாக லட்டு வழங்கப்பட்டு வந்தது.

இந்‌நிலையில் வார இறுதி நாள்களில் பக்தர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்திலிருந்து, 40‌ ஆயிரமாக உயர்ந்துள்ளதால், வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் நடைப்பதை பக்தர்களுக்கான திவ்ய தரிசனம் டிக்கெட் ரத்து செய்யப்பட்டு அவர்கள் இலவச தரிசனத்திற்கான வரிசையில் அனுமதிக்கப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளதாவது: வழக்கமாக மலைப்பாதையில் 15 ஆயிரம் 20 ஆயிரம் பக்தர்கள் வந்த நிலையில் தற்போது சாதாரண நாட்களில் 30 ஆயிரம் பக்தர்களும் வார இறுதி மற்றும் விடுமுறை நாட்களில் 40 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் வருகின்றனர். இதனால் திவ்ய தரிசனம் டிக்கெட் பெற்ற பக்தர்கள் தரிசனத்திற்கு 10 மணி நேரத்திற்கு மேல் காத்திருக்க வேண்டியுள்ளது.

இந்த நேரங்களில் பக்தர்கள் இடையே தள்ளுமுள்ளும், கேட் மீது ஏறுவது போன்ற செயல்களில் ஈடுபடுவதால் தேவஸ்தான அதிகாரிகளுக்கு வரிசைகளை ஒழுங்குபடுத்துவதில் சிரமம் ஏற்படுகிறது. எனவே இந்த வாரம் முதல் வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் திவ்ய தரிசனம் டிக்கெட் ரத்து செய்து மலைப்பாதையில் பாதயாத்திரையாக வந்தாலும் இலவச தரிசனத்திற்காண வரிசையில் அனுமதிக்கப்படும்

(Visited 5 times, 1 visits today)
இந்த பதிவை முழுமையாக படிக்க

தொடர்பு பட்டவை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *