இந்தியாவில் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகள் அதிகம்: யுனிசெப் தகவல்

http://viduthalai.in/component/content/article/42-other-news/149931-2017-09-21-10-23-02.html

வியாழன், 21 செப்டம்பர் 2017 15:47

புதுடில்லி, செப்.21 ஊட்டச்சத்து குறைபாடு இல்லா இந்தியாவை உருவாக்குவது தொடர்பாக டெல்லியில் தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது.

இக்கருத்தரங்கினை மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் மேனகா காந்தி தொடங்கி வைத்தார். கருத்தரங்கில் அய்.நா.வின் குழந்தைகள் நிதியத்தின் (யுனிசெப்) இந் திய பிரதிநிதி யாஸ்மின் அலி ஹேக் பேசியதாவது:- உலகிலேயே ஊட்டச்சத்து குறைபாடு உள்ள 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் இந்தியாவில்தான் அதிக குழந்தைகள் உள்ளனர். இது கவலை தரும் விஷயம். கடந்த 10 ஆண்டுகளில் ஊட்டச்சத்து குறைபாட்டில் மாற்றம் வந்தபோதிலும், இன்னும் நிறைய செய்ய வேண்டி உள்ளது. ஊட்டச்சத்து குறைபாட்டுக்கு உணவு பற்றாக்குறை காரணம் அல்ல. குழந்தைகளின் வளர்ச்சியில் தடைகளை ஏற்படுத்தக் கூடிய சில பழைய பழக்கவழக்கங்கள், சில சமயங்களில் தாய்ப்பால் ஊட்டுவது தாமதம் ஆவதால் பச்சிளம் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

(Visited 3 times, 1 visits today)
இந்த பதிவை முழுமையாக படிக்க

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *