ஆகஸ்டு 15 – ஆர்.எஸ்.எஸ்-இன் பங்கு குறித்து கலாய்க்கும் டிவிட்டர்

http://www.vinavu.com/2017/08/10/what-is-the-contribution-of-rss-in-freedom-movement/

ங்கிலாந்தின் காலனிய ஆதிக்கத்தில் இருந்து விடுபட 1947க்கு முன் பல்வேறு இயக்கங்கள் முன்னெடுக்கப்பட்டது. அந்த வகையில் 1942ம் ஆண்டு காந்தியின் தலைமையில் துவங்கியது வெள்ளையனே வெளியேறு இயக்கம். இவ்வியக்கத்தின் 75-ம் ஆண்டு நேற்று (ஆகஸ்டு 9-ம் தேதி புதன்கிழமை) கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி பாராளுமன்றத்தில் பேசிய பிரதமர் மோடி, 1942-ன் உணர்வை நாம் மீண்டும் பெற வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

அந்தக் காலகட்டத்தில் வெள்ளையருக்கு எதிராக “செய் அல்லது செத்து மடி” என்கிற முழக்கத்தை காந்தி முன்வைத்திருந்தார்; அதைக் கொஞ்சம் பட்டி டிங்கரிங் செய்து “செய்வோம், நிச்சயம் செய்வோம்” என முழங்கினார் மோடி.

எதைச் செய்வதாம்?

சுதந்திரப் போராட்ட காலத்தில் இருந்த உணர்வு மெல்ல மெல்ல வடிந்து போனதால், மக்களிடையே கடமையின் முக்கியத்துவம் குறைந்து உரிமையின் முக்கியத்துவம் அதிகரித்துள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார் பிரதமர். போக்குவரத்து சிக்னல்களை மீறுவது, எச்சி துப்புவது என மக்கள் அடிப்படை விதிகளை கூட கடைபிடிப்பதில்லை என அங்கலாய்த்துள்ளார் பிரதமர். அதாவது இந்தியா முழுவதும் மக்கள் உரிமைகளுக்காக போராடுகிறார்கள். பா.ஜ.க அரசின் மீது கொலை வெறியில் இருக்கிறார்கள். அவர்களை எப்படித் தண்டிக்கலாம் என யோசித்துப் பார்த்த மோடி இறுதியில் அந்நியன் பட இயக்குநர் போல கருட புரணாத்தில் இறங்கி விட்டார் போலும்.

பொது இடங்களில் எச்சி துப்புவது இருக்கட்டும்; எந்த விதிகளின் அடிப்படையில் அதானிக்குக்கும் பன்னாட்டுக் கம்பெனிகளுக்கும் நிலங்களும் இன்னபிற அடிப்படை வசதிகளும் சல்லிக் காசுகளுக்கு வாரி வழங்கப்பட்டன என்பதை மாண்புமிகு பிரதமர் குறிப்பிடவில்லை. எந்த விதிகளின் அடிப்படையில் இந்திய வங்கிகளுக்கு பட்டை நாமம் சாத்திய மல்லையா தப்புவிக்கப்பட்டார் என்பதையும் பிரதமர் குறிப்பிடவில்லை. மேலும், எந்த விதிகளின் அடிப்படையில் வியாபம் கொலைகள் நடந்து வருகின்றன என்பதையோ, எந்த விதிகளின் அடிப்படையில் ரிலையன்ஸ் ஜியோவுக்கு பொதுத்துறை

(Visited 1 times, 1 visits today)
இந்த பதிவை முழுமையாக படிக்க

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *