அருவியின் அடையாளம் அதீதி பாலன்!

http://cinema.nakkheeran.in/Talkies.aspx?T=4129

பதிவு செய்த நாள் :12, ஆகஸ்ட் 2017(19:4 IST)

மாற்றம் செய்த நாள் :12, ஆகஸ்ட் 2017(19:4 IST)

அருவியின் அடையாளம் அதீதி பாலன்!

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “ அருவி “. இப்படத்தை இயக்கியுள்ளார் அருண் பிரபு புருசோத்தமன், கே.எஸ்.ரவி குமாரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர். அண்மையில் அருவி படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அருவி படத்தின் உயிர் கதாபாத்திரமாக கருதப்படும் அருவி என்கின்ற பெண்ணின் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் அதீதி பாலன்.

அருவி சமுக-அரசியல் சார்ந்தும்.  பாடல்கள் , நகைச்சுவை என்று அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் ஏற்ற வணிகம் சார்ந்த திரைப்படமாகவும் உருவாக்கப்படிருக்கிறது. இப்படம் வெளியாவதற்கு முன்னரே ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழா, மும்பை சர்வதேச திரைப்பட விழா என பல்வேறு சர்வதேச திரைப்பட விழாவில் நல்ல பாராட்டுகளை பெற்றுள்ளது.

இதுபற்றி இயக்குனர் அருண் பிரபு புருசோத்தமன் கூறுகையில், இந்த அருவி என்கின்ற குறிப்பிட்ட காதபாத்திரத்திற்காக 8 மாதம் 500 க்கும்  மேற்பட்ட பெண்களிடம் நடிப்பு தேர்வு நடத்தினோம். இறுதியில் அதீதி பாலன் தேர்வு செய்யப்பட்டார். இந்த திரைப்படம் அருவி என்கிற பெண்ணின் கதாபாத்திரத்தைச் சுற்றி நடக்ககூடிய சம்பவங்களை குறித்து இருக்கும். அருவி அனைவருடனும் அன்பு காட்டகூடியவள். இவர் நல்லவர்,  இவர் கெட்டவர் என்று பிரித்து பார்க்கமாட்டாள். அருவினூடைய சாகசங்களும், விபத்துகளும் தான் படத்தினூடைய மையக்கருத்து என்று அவர் குறிப்பிட்டிருந்தார்

– கோ.ஸ்ரீ பாலாஜி

(Visited 11 times, 1 visits today)
இந்த பதிவை முழுமையாக படிக்க

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *