‘அப்பா மம்மூட்டிக்கு வில்லனா நடிக்கணும்’ துல்கர் சல்மான் விருப்பம்

http://cinema.dinakaran.com/cine-news-details.aspx?id=25103&id1=3

10/5/2017 12:29:04 PM

தமிழில் வாயை மூடி பேசவும், ஓ.கே கண்மணி படங்களுக்குப் பிறகு மலையாள நடிகர் துல்கர் சல்மான் நடித்துள்ள படம், சோலோ. பிஜோய் நம்பியார் இயக்கியுள்ளார். சாய் தன்ஷிகா, ஆர்த்தி வெங்கடேஷ், ஸ்ருதி ஹரிஹரன், நேகா சர்மா ஹீரோயின்கள். இது குறித்து துல்கர் சல்மான் கூறியதாவது: தமிழிலும், மலையாளத்திலும் உருவான இதில் நடித்தது சவாலாக இருந்தது. காரணம், இதில் நான் ஏற்றுள்ள வெட்னரி டாக்டர், கேங்ஸ்டர், இசைக்கலைஞன், ராணுவ வீரன் கேரக்டர்கள்.

நான்கு பரிமாணங்களில் என் நடிப்பை வெளிப்படுத்தியதை டப்பிங் பேசும்போது பார்த்து ஆச்சரியப்பட்டேன். சாய் தன்ஷிகா பார்வையில்லாத பெண்ணாக நடித்துள்ளார். அவருக்கு விருது கிடைக்கும். நடிகை சாவித்திரியின் வாழ்க்கையை மையமாக வைத்து தமிழில் உருவாகும் நடிகையர் திலகம் படத்தில், ஜெமினி கணேசன் வேடத்தில் நடிக்கிறேன்.

திரையில் நாம் பார்த்த ஜெமினி கணேசனை பிரதிபலிக்க மாட்டேன். நிஜ வாழ்க்கையில் அவர் எப்படி இருந்தார் என்பதைக் கேட்டறிந்து, படத்தின் இயக்குனர் எப்படி நடிக்கச் சொல்கிறாரோ அப்படி நடிக்கிறேன். நான் ஏன் இன்னும் அப்பா மம்மூட்டியுடன் இணைந்து நடிக்கவில்லை என்று கேட்கிறார்கள். அப்பா ஹீரோவாகவும், அவருக்கு நான் வில்லனாகவும் நடிப்பது போல் வித்தியாசமான கதை அமைந்தால், இணைந்து நடிப்பது பற்றி முடிவு செய்யலாம்.

(Visited 1 times, 1 visits today)

<pre>இந்த பதிவை முழுமையாக <a href="http://cinema.dinakaran.com/cine-news-details.aspx?id=25103&id1=3" target="_blank">படிக்க</a></pre>

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *