அன்றாட நிகழ்விலும் கமல் சுறு,சுறுப்பு: அரசியலுக்கு அச்சாரமா?

http://www.dinamalar.com/news_detail.asp?id=1833348

Advertisement பதிவு செய்த நாள் 13 ஆக
2017
15:54

சென்னை: தமிழக அரசியலில் அவ்வப்போது புதுப்புது டுவிட்டுகளை பதியவிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வரும் கமல் தற்போது தமிழக மக்கள் மீது முழுக்கவனம் செலுத்த துவங்கியுள்ளார். நடிகர் கமலஹாசன் முதன்முதலாக தமிழகத்தில் ஊழல் மலிந்து விட்டது, எந்த துறையில்தான் ஊழல் இல்லை என தெரிவித்தார். இதற்கு ஆளும் அதிமுகவினர் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர். கருத்து சுதந்திரத்தை முடக்குவதா என பல்வேறு தரப்பினரும் ஆளும்கட்சிக்கு கேள்வி எழுப்பினர். இந்நிலையில் கமல் அவ்வப்போது தனது டுவிட்டரில் சில முக்கிய விஷயங்களை பேசி வருகிறார்.


நீட் தேர்வு விவகாரம்

தற்காலிகமாக ஓராண்டுக்கு தமிழகத்திற்கு விலக்கு அளிக்க தயார் என மத்திய அமைச்சர் நிர்மலா அறிவித்தவுடன் நீட் தேர்வு தொடர்பாக இன்று அவசரசட்ட முன்வடிவு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்க முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார். தமிழக பிரதிநிதிகள் டில்லியில் மத்திய அமைச்சர்களுடன் நாளை ஆலோசனை நடத்தவுள்ளனர்.


பிற்பாடும் பேரம் பேசலாம்

இந்நிலையி்ல கமல் இன்று ( 13 ம் தேதி ) அவர் பதிவிட்ட முதல் டுவிட்டில் ” உபி.,யில் மருத்துவமனையில் பலர் ஆக்ஸிஜன் சிலிண்டர் தட்டுப்பாட்டால் இறந்துள்ளனர். இது போல் இனியும் நடக்க கூடாது ” என்று தெரிவித்திருந்தார். அடுத்த சில நிமிடங்களிலேயே ” நீட்தேர்வை ஒத்திப்போட மத்திய அரசு ஒத்துழைக்குமாம்.குதிரைகளை பிற்பாடும் பேரம் பேசலாம். மாணவர் எதிர்காலம் பற்றியது. தயைகூர்ந்து உடனே பேசுங்கள் ” என்று கூறியுள்ளார். ஊழல் உள்ளிட்ட பொதுவான விஷயங்கள் குறித்து பேசி வந்த கமல் தற்போது தமிழக

(Visited 4 times, 1 visits today)
இந்த பதிவை முழுமையாக படிக்க

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *